விஜய் - ஸ்டாலின்
விஜய் - ஸ்டாலின்web

முதல்வருக்கு எதிராக நிற்கும் தவெக வேட்பாளர் யார்..? சென்னை வேட்பாளர்கள் பட்டியல்!

2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
Published on
Summary

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 50 ஆண்டுகளாக ஆட்சி புரியும் திமுக–அதிமுக மாற்றாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்குகிறது. நுங்கம்பாக்கம் ஹோட்டலில் நடந்த விழாவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் நேரடியாக போட்டியிடுவது அரசியல் சூழலை சூடுபடுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கக் காத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல், தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக தலைவர் விஜய் தன்னை முன்னிறுத்தி களம் காணவிருக்கிறார்.

விஜய்
விஜய்

திமுக, அதிமுக, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை திங்கட்கிழமை தொடங்கி கடைசி நாளாக ஏப்ரல் 6-ஆம் தேதி முடிய உள்ளது. இந்தசூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழத்தின் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

விஜய் - ஸ்டாலின்
தவெக வேட்பாளர் பட்டியல் | என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எங்கெங்கு போட்டி..?

தவெகவின் சென்னை வேட்பாளர்கள் பட்டியல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை இன்று நுங்கம்பாக்கம் தனியார் ஹோட்டலில் நடந்த வேட்பாளர் அறிமுக விழாவில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக அரசியலில் கட்சித் தலைவர் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசூழலில் சென்னையில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில், முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் வி.எஸ்.பாபு, துணை முதல்வரின் சேப்பாக்கம் தொகுதியில் டி.செல்வம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளிலும் போட்டியிடும் நபர்கள்,

பெரம்பூர்- ஜோசப் விஜய்

கொளத்தூர்- வி.எஸ்.பாபு

ஆர்.கே.நகர்- என்.மரிய வில்சன்

வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜுனா

திரு.வி.க.நகர் (தனி)- எம்.ஆர்.பல்லவி

எழும்பூர்(தனி)- ராஜ்மோகன்

ராயபுரம்- கே.வி.விஜய் தாமு

துறைமுகம்- பி.எஸ்.அசோக்

சேப்பாக்கம்- டி.செல்வம்

ஆயிரம் விளக்கு- ஜே.சி.டி பிரபாகர்

அண்ணா நகர்- வி.கே.ராம்குமார்

விருகம்பாக்கம்- ஆர்.சபரிநாதன்

சைதாப்பேட்டை- அருள் பிரகாஷ்

தி.நகர்- என்.ஆனந்த்

மயிலாப்பூர்- வெங்கட்ரமணன்

வேளச்சேரி- ஆர்.குமார்

விஜய் - ஸ்டாலின்
பெரம்பூர், திருச்சி கிழக்கு | 2 தொகுதிகளில் விஜய் போட்டி.. 234 தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com