\
stalin, vijay, veerapandiyan
stalin, vijay, veerapandiyanweb

”தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் அப்படி சொல்லியிருக்க கூடாது..” - சிபிஐ வீரபாண்டியன்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி 3 மாதம் கூட நீடிக்காது என மூத்த அரசியல் தலைவரான ஸ்டாலின் தெரிவித்திருக்கக் கூடாது என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.
Published on
Summary

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில், அது மூன்று மாதம் கூட நீடிக்காது என ஸ்டாலின் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. புதிய ஆட்சிக்கு அவகாசம் தர வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர். சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், அனுபவமிக்க தலைவரான ஸ்டாலின் இவ்வாறு கூறியிருக்கக் கூடாது என விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டையும் ஓரங்கட்டி விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைபிடித்துள்ளது, விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சி மாற்றம் நடந்துவரும் சூழலில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். திமுக இன்ஸ்டாகிராம், கவர்ச்சியால் தான் தவெக ஆட்சியை பிடித்துவிட்டது என்றும், விரைவில் இந்த ஆட்சி கலைந்துவிடும் என்று கடுமையாக விமர்சித்து வருகிறது.

விஜய் - ஸ்டாலின்
விஜய் - ஸ்டாலின்web

இந்தசூழலில் சமீபத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின், ”தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்து ஆறு மாதங்களுக்கு நான் பேசப் போவ தில்லை என்று கூறினேன். ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்தது. அத்தகைய சூழலும் தற்போது வந்துவிட்டது. 6, 5, 4 மாதங்​கள்​கூட அல்ல, இன்​னும் 3 மாத​மாவது தாங்​குமா என்ற கேள்விக்​குறியோடு​தான் இந்த ஆட்சி நடந்துகொண்​டிருக்​கிறது. இந்தச் சூழலில்தான் மாற்றுக் கட்சியினர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

stalin, vijay, veerapandiyan
நார்வே செஸ் 2026-ல் வென்று சாதனை.. பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய்!

முக ஸ்டாலினின் இத்தகைய கருத்திற்கு பிறகு தவெக ஆட்சி நிலைக்காது என்ற கருத்துகள் சார்ந்து பதிலளித்த சிபிஎம் சண்முகம், “ஆட்சிக்கு புதியதா வந்திருக்காங்க, எந்த துறை எப்படி இருக்கிறது என்று புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வேண்டும். சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு முதல்வர் வருகிறார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், அது நல்ல விசயம் தானே. அதற்குள் ஆட்சி கலைந்துவிடும் என்று சொல்வது தவறான விசயம். ஒன்னே முக்கால் கோடி மக்கள் தேர்வுசெய்து ஆட்சியில் அமரவைத்துள்ளார்கள், அதை 2 மாதம் கூட தாங்காது, 3 மாதம் கூட தாங்காதுனு சொல்வது என்ன பேச்சு? இதை யார் சொன்னாலும் தவறுதான்” என பேசியிருந்தார்.

சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்Pt web

இந்தசூழலில் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியனும் கிட்டத்தட்ட இதே கருத்தையே வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் மூத்த தலைவர். பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் மிகுந்தவர். ஒரு பெரிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. இந்தியா கூட்டணியில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கிறோம். இந்தியா கூட்டணி வலுபெற வேண்டும், கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு, இந்திய நலன்களை முன்னிறுத்துகிறபொழுது இந்தியா கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை கூட்டம் கூட்டி அறிவிப்போம்” என்று பேசினார்.

stalin, vijay, veerapandiyan
"திமுக என்ற கூட்டணி இப்ப இல்ல; ஸ்டாலின், EPS யார் கூறினாலும் தவறு.." தெளிவுபடுத்திய CPM சண்முகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com