அரியலூர் | ‘மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டயே..’ - திருட முயன்று வசமாக சிக்கிய திருடன்!

“மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டேன்”‌ என்ற வடிவேலு காமெடி பாணியில் சிசிடிவி இருந்ததை பார்க்காமல், பைக்கை திருட முயன்றுள்ளார் ஒருவர். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
bike theft attempt
bike theft attemptputhiathalaimurai

அரியலூர் நகரில் உள்ள பொன்னுசாமி அரண்மணை தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் வேலை செய்து வருகிறார். இவர் தன் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர், பைக்கின் அருகில் நின்று கொண்டு சுற்றி சுற்றி நோட்டமிட்டு கொண்டிருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தான் வைத்திருந்த போலி சாவியை போட்டு பைக்கை திருட முயற்சி செய்துள்ளார். இதை அறிந்த ஆரோக்கிய சாமி, “யார் நீங்கள்? பைக் பக்கத்தில் என்ன செய்கிறீர்கள்?” என கேட்டுள்ளார். அதற்கு அவர் தலை சீவுவதாக கதை சொல்லியுள்ளார்.

bike theft attempt
புதுக்கோட்டை | ஆம்புலன்ஸிலேயே பிறந்த குழந்தை.. தாய், சேய் நலம் காத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

சந்தேகமடைந்த ஆரோக்கியசாமி உடனே சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்தபோது அவர் பைக் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பைக்கை திருட முயன்றவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோபி என்கிற கோபிநாத் என்பது தெரியவந்தது.

மேலும், அவர் இது போல் தொடர் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக அறிந்த போலீசார் அவரிடம்‌ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திருட முயன்ற வீடியோ வைரலான நிலையில், “மண்ட மேல் இருந்த கொண்டைய மறந்துட்டயேப்பா” என்றபடி வடிவேலு பாணியில் அவரை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்

bike theft attempt
தொடரும் கனமழை.. எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? எங்கெல்லாம் கனமழை தொடர வாய்ப்பு?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com