தொடரும் கனமழை.. எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? எங்கெல்லாம் கனமழை தொடர வாய்ப்பு?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி உட்பட மொத்தம் 9 இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை
கனமழைமுகநூல்

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. ‘15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

பள்ளிகளுக்கு மட்டும்...

இந்நிலையில், பெய்துவரும் கனமழையால் இன்று (23.11.2023) நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இத்தோடு கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு...

இந்த 8 இடங்களோடு சேர்த்து, இன்று (23.11.2023) தேனியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் அளவு கனமழை என்று பதிவாகியுள்ளது.

கனமழை
மதுரை: மருத்துவமனையில் ஆதரவின்றி தவிக்கும் மூதாட்டி..மூத்த குடிமக்கள் உதவி மையத்தின் சேவை நிறுத்தம்!

காலை 10 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்

கூடுதலாக தமிழகத்தில் இன்று (23.11.2023) காலை 10 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்குள்

- நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும்,

- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற 8 மாவட்டங்களில் மிதமான மழையும்,

- புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழையும்

இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com