“நாய்களை வேறு வார்டுக்கு மாற்றுங்கள்”- சிரிக்க வைத்த கவுன்சிலர்.. ஆடிப்போன தலைவர்!

நாய் தொல்லை அதிகரித்து வருவதால், தன்னுடைய வார்டில் இருக்கும் நாய்களை வேறு வார்டில் கொண்டுபோய் விடுமாறு கோரிக்கை வைத்த கவுன்சிலரால் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
கவுன்சிலர் அப்துல் ரகுமான்
கவுன்சிலர் அப்துல் ரகுமான்புதிய தலைமுறை
Published on

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்தமாக பேசினர்.

அப்போது பேசிய கவுன்சிலர் முருகானந்தம், சென்னையில் நாய்கள் கடித்து பலர் காயம் அடைந்துள்ளனர். அதுபோன்று இங்கு மனிதர்களை கடித்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

கவுன்சிலர் அப்துல் ரகுமான்
“என்னுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகமெல்லாம் போய் சாதிக்கணும்” - முதலமைச்சர்

அதனைத்தொடர்ந்து பேசிய கவுன்சிலர் அப்துல் ரகுமான், “என் வார்டில் உள்ள நாய்களை பிடித்து அடுத்த வார்டில் கொண்டு போய்விட்டு விடுங்கள். அது குழம்பி போய் சுற்றிக்கொண்டு இருக்கும். தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்தாலும் கடிக்கும். சாப்பாடு வைக்கவில்லை என்றாலும் துரத்தி துரத்தி கடிக்கும். இல்லையென்றால் பிடித்து, வெளியூரில் கொண்டு போய் விட்டுவிடுங்கள்.

இப்படியே தொடர்ந்தால் நாய்கள் அனைத்திற்கும் வெறி பிடித்து அனைவரையும் துரத்தி துரத்தி கடிக்கும். இதற்கு அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்தால்தான் அதைக் கட்டுப்படுத்த முடியும் வேறு வழி இல்லை” என்றார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒட்டுமொத்தமாக நகராட்சி மூலமாக வலியுறுத்துவோம் என்றும் நகர்மன்ற தலைவர் உறுதி அளித்தார்.

கவுன்சிலர் அப்துல் ரகுமான்
சனாதன வெறுப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com