முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்Twitter

“என்னுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகமெல்லாம் போய் சாதிக்கணும்” - முதலமைச்சர்

தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வஞ்சிப்பாளையத்தில் இன்று புதிதாக தொடங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை தொடங்கிவைத்தார்.
Published on

திருப்பூர் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வஞ்சிப்பாளையத்தில் இன்று தொடங்கப்பட்டது. புதிதாக தொடங்கப்பட்ட அந்த கல்லூரியின் கட்டடங்களை முதலமைச்சர் தொடங்கிவைத்து காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “என்னுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகமெல்லாம் போய் சாதிக்கணும் என்பதுதான். பெண் பிள்ளைகள் உயர்படிப்பை அதிகம் படிக்க வேண்டும். தீரன் சின்னமலையின் பெயரைச் சொன்னால், இப்போதும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com