எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

மாஜி அமைச்சர்களுக்கும் இபிஎஸ்-க்கும் இடையே முற்றும் வாக்குவாதங்கள்... அதிமுகவில் நடப்பது என்ன?

“என் மாவட்டத்துல யார் யாரோ அதிகாரம் பண்றாங்க இதெல்லாம் நீங்க கேட்கமாட்டீங்களா?” என மற்றுமொரு மாஜியும் இ.பி.எஸ்ஸிடம் மல்லுக்கு நிற்க. அதகளமாகியிருக்கிறது அதிமுக வட்டாரம். நடப்பது என்ன?
Published on

“நீங்க இப்படி கண்டுக்காம இருந்தா என்ன பண்றது. இந்த விஷயத்துல நீங்க அமைதியா இருக்குறது நல்லா இல்லைங்க. நம்ம ஆட்களை அங்க அனுப்பியிருக்கவே வேண்டாம். நடந்தது நடந்துபோச்சு. இப்போ உங்க பேர்ல ஒரு அறிக்கையாவது வந்திருக்கவேண்டாமா?” - அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், இப்படித்தான் பொரிந்து தள்ளியிருக்கிறார் துணைப் பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமி.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிfb

இது ஒருபுறமிருக்க, “என் மாவட்டத்துல யார் யாரோ அதிகாரம் பண்றாங்க இதெல்லாம் நீங்க கேட்கமாட்டீங்களா?” என மற்றுமொரு மாஜியும் இ.பி.எஸ்ஸிடம் மல்லுக்கு நிற்க. அதகளமாகியிருக்கிறது அதிமுக வட்டாரம். நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மே 15 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பட்டியலை சமர்ப்பிக்க அதிமுக தலைமை வலியுறுத்தியிருந்தது. ஆனாலும், பல்வேறு மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முழுமை பெறாத நிலையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. நாளொன்றுக்கு காலை இருபது மாவட்டங்கள், மாலை 20 மாவட்டங்கள் என ஆலோசனைக் கூட்டம் திட்டமிடப்பட்டது.

அதன்படி, நேற்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிவகங்கை, அரியலூர், திண்டுக்கல், பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களோடு இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். மாலை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பூத் கமிட்டி வலுப்படுத்துவது தொடர்பாகவும், அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை.. மருத்துவப் பரிசோதனைக்குப் பின் கைது செய்ய முடிவு!

முற்றும் வாக்குவாதம்

இது ஒருபுறமிருக்க, அதிமுக மூத்த தலைவர்களுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன. இதுகுறித்து விபரமறிந்த வட்டாரத்தில் பேசினோம்..,

pt

“முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் கலந்துகிட்டதுதான் கட்சியில மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கியிருக்கு. குறிப்பாக, மூத்த தலைவர் கே.பி.முனுசாமி சற்று கடுமையாகவே இ.பி.எஸ்கிட்ட தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினாரு. நம்ம ஆட்கள் அங்க போயிருக்கவே கூடாது. பெரியார், அண்ணாவை இழிவுபடுத்துற இடத்துல நாம இருக்கலாமா. முதல்ல அந்த மாநாட்டுக்குப் போக நீங்க எப்படி அனுமதி கொடுத்தீங்க. புரிஞ்சுதான் இதெல்லாம் பண்றீங்களா என பொரிஞ்சு தள்ளியிருக்கிறாரு. நீங்க இப்படி அமைதியாவே இருக்குறது நல்லா இல்ல. இந்த விஷயத்துல நாம கடுமையா எதிர்வினை ஆற்றியிருக்கணும். நீங்களே பேசியிருக்கணும் எனவும் படபடத்திருக்காரு. எல்லாத்தையும் பொறுமையாகக் கேட்ட எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கலாம்ணே என்று மட்டும் பதிலளித்துவிட்டு அமைதியாகியிருக்கிறாரு” என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
18 மாதங்கள்.. 42 ஆயிரம் தாக்குதல்கள்.. பிற நாடுகளில் இஸ்ரேல் ஆடிய கதகளி!

45 வயதுக்கும் கீழ்... கட்சியிலயே இல்லையாம்

மற்றொருபுறம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் இ.பி.எஸ்ஸுக்கு இடையே நடந்த வாக்குவாதம் குறித்துப் பேசும்போது..,

“கரூர் மாவட்ட மா.செவான எம்.ஆர் விஜயபாஸ்கர்கிட்ட இபிஎஸ் பேசும்போது, கரூர் மாவட்ட பூத் கமிட்டி சரியாக இல்லை என பல முறை உங்ககிட்ட சொல்லி இருக்கேன்.. பூத் கமிட்டி என்பதுதான் பேஸ்மெண்ட்.. அதுதான் ஸ்டிராங்கா இருக்கனும்.. பூத் கமிட்டியில் 45 வயதுக்குட்பட்டவங்களை போடுங்கன்னு சொன்னேன்.. ஆனா அதைவிட அதிக வயது ஆளுங்களை எல்லாம் போட்டு வெச்சிருக்கீங்க.. எனக்கு 45 வயதுக்குள்ள இருக்கிறவங்கதான் பூத் கமிட்டியில் இருக்கனும்” என காட்டமாக எடப்பாடி பேச. 45 வயதுக்குள்ள உள்ள நிர்வாகிகளே கட்சியில இல்ல என விஜயபாஸ்கர் விளக்கம் கொடுக்க அது இருவருக்குள்ளும் மிகப்பெரிய வாக்குவாததை உண்டாக்கியிருச்சு. அதுமட்டுமல்ல,, என்னோட மாவட்டத்துக்குள்ள சேலம் இளங்கோவன் போன்ற யார் யாரோ வந்து அதிகாரம் பண்றாங்கண்ணும் விஜயபாஸ்கர் படபடக்க வாக்குவாதம் இன்னும் அதிகரிச்சிருக்கு. தங்கமணி, வேலுமணி சமாதானம் செய்யவும்தான் அந்த இடம் இயல்புக்கு வந்திருக்கு” என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

எடப்பாடி பழனிசாமி
இந்திய விமானச் சேவைகளில் குளறுபடிகள்.. ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்!

இந்த விவகாரங்கள் தொடர்பான செய்திகள் வேகமாகப் பரவியதை அடுத்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களின் போலி கதைகளுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எடைபோட்டு பார்க்கும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் - All Will Fall Flat” எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
இரண்டு மிகப்பெரிய தவறுகள்.. 5 சதங்கள் விளாசியும் இந்திய அணி தோற்க இவைகளே காரணம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com