18 மாதங்கள்.. 42 ஆயிரம் தாக்குதல்கள்.. பிற நாடுகளில் இஸ்ரேல் ஆடிய கதகளி!
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஆயுத மோதல்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் ACLED அமைப்பு தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பிறகு ஹமாஸை அழித்தொழிப்பதாக கூறி இஸ்ரேல், காஸா மீதும், ஹமாஸுகு ஆதரவான வேறு சில நாடுகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. பாலஸ்தீனத்தின் மீது 24,931 தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் 50,779 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ACLED தரவு கூறுகிறது. அதேபோல் லெபனான் நாட்டில் 16,704 தாக்குதல்களில் 4,102 பேரை இஸ்ரேல் அழித்துள்ளது. சிரியாவில் இஸ்ரேல் நடத்திய 947 தாக்குதல்களில் 658 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் மீது 58 தாக்குதல்களை நடத்தியுள்ளது இஸ்ரேல். இதில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டின் மீது 39 இஸ்ரேல் நடத்திய 39 தாக்குதல்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.