நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை.. மருத்துவப் பரிசோதனைக்குப் பின் கைது செய்ய முடிவு!
நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை அழைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அதன் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொகைன் போதைப்பொருளை நடிகர் கிருஷ்ணாவும் உட்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்த நடிகர் கிருஷ்ணாவிடம், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் அவரைக் கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.