ஜாபர் சாதிக் விவகாரம் - “அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார்” - இயக்குநர் அமீர்

“அதிகாரிகள் எப்பொழுது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
ஜாபர் சாதிக், அமீர்
ஜாபர் சாதிக், அமீர்pt web

ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீர் தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் தெளிவுபடுத்திவிட்டபிறகும் கூட இருவரையும் தொடர்புபடுத்திய கருத்துகள் இணையத்தில் வந்த வண்ணமே இருந்தன.

இந்நிலையில் இயக்குநர் அமீர், பரவிவரும் செய்திகள் குறித்து தனது கருத்தினை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடைய இறைவன் மிகப்பெரியவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத்தெளிவாக விளக்கியபிறகும், என் மீது பேரன்பு கொண்ட ஊடவியலாளர்களும், நண்பர்களும் தொடர்ச்சியாக சமூக வலைதளப்பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புபடுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அடிப்படையாகவே மது, பாலியல் தொழில், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவன் நான். அப்படி இருக்கையில் இதுபோன்ற குற்றச்செயலில் என்னை நீங்கள் தொடர்புபடுத்திப் பேசுவதால் எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, என் குடும்பத்திற்கு மன உளைச்சல்களை ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்துவிட முடியாது.

ஜாபர் சாதிக், அமீர்
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ - பெரும்கனவு லட்சியத்தை உழைப்பால் சாத்தியமாக்கிய முதல்வர்

நீங்கள் சொல்லுகின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள், இன்னும் பல்வேறு துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சோதனையான காலக்கட்டத்தில் என்மீது அன்புகொண்டு, என்மீது நம்பிக்கை கொண்டு, எனக்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இறைவன் மிகப்பெரியவன்” என தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூன்று ஆண்டுகளாக மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இவர் இருந்து வந்தநிலையில், குற்றச்சாட்டு எழுந்த உடனேயே ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’, அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இயக்குநர் அமீர் குறித்தும் சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இத்தகைய சூழலில் இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை அப்போதேவும் வெளியிட்டு இருந்தார்.

தயாரிப்பாளர் ஜாபர் சித்திக்
தயாரிப்பாளர் ஜாபர் சித்திக்

அதில், “கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜாபர் சாதிக், அமீர்
”தண்டிக்கப்பட வேண்டியதுதான்”-’இறைவன் மிகப்பெரியன்’ தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து அமீர் அறிக்கை!

ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.!” என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்தும் இயக்குநர் அமீரையும் ஜாபர் சாதிக்கையும் தொடர்புபடுத்தி பல்வேறு இணையப்பதிவுகள் வெளிவந்தவண்ணமே இருந்தன. இந்நிலையில்தான் இயக்குநர் அமீர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அமீர், ஜாபர் சாதிக்
அமீர், ஜாபர் சாதிக்

முன்னதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதியிலுள்ள அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் சலீம், மைதீன் ஆகியோரின் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். 

சோதனை முடிந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டுக்கு சீல் வைத்து சென்றனர். விசாரணைக்கு ஆஜராகமாறு சம்மன் அளித்தும் விசாரணைக்கு ஆஜராகாததால் வீட்டை சோதனையிட்டு சீல் வைத்து சென்றதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com