"குற்றச்சாட்டுகள் தவறானவை” - ஆவின் பால் சர்ச்சை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ஆவினில் கொழுப்புச்சத்து குறைந்த பால் விற்பனை குறித்த சர்ச்சை தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளித்துள்ளார்.
ஆவின், மனோ தங்கராஜ்
ஆவின், மனோ தங்கராஜ்புதிய தலைமுறை

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில், பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் கொழுப்புச்சத்து குறைந்த பால் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய நிறுவனமான Fssai பாலை நான்காக வகைப்படுத்தியுள்ளது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், ப்ரீமியம் என கொழுப்பு, திடச்சத்து அடிப்படையில் நான்கு வகைகளை பிரித்து வகைப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 16 பந்துகளில் 20 ரன் தேவை; ஆனாலும் தோனி செய்த மேஜிக்! வைரலாகும் Champions Trophy வின்னிங் மொமண்ட்ஸ்!

தமிழ்நாடு பால் கூட்டுறவு சங்கமான ஆவினில் 1.5% கொழுப்புச்சத்து கொண்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், அரை லிட்டர் 18 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. சமன்படுத்தப்பட்ட பாலில் 3 % கொழுப்புச்சத்து உள்ளது. பசும்பால் 3.5% கொழுப்புச்சத்துடன் அரைலிட்டர் 20 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. நிலைப்படுத்தப்பட்ட பால் 4.5 % ஆவின் கோல்ட் 5% நிறைகொழுப்பு பால் 6.% டீமோட் 6.5% கொழுப்புச்சத்துடனும் இருக்கிறது.

ஆவின் பால்
ஆவின் பால்கோப்பு புகைப்படம்

தவிர எருமை பால் உள்ளிட்ட கலப்படம் இல்லாத தூய பசும் பாலாக இருப்பின் 3.5% கொழுப்பு சத்துடன் 8.5% திட சத்து சேர்த்து பசும்பால் என்று விற்க Fssai அனுமதித்துள்ளது. ஆவினை பொறுத்தவரை பசும்பால், எருமைப் பால் இரண்டும் ஒரே கொள்கலனில்தான் வாங்கவும், சேமிக்கவும் படுகிறது. ஒரே டேங்கர்லாரியில்தான் பண்ணைக்கு பால் கொண்டு வரப்படுகிறது.

இதையும் படிக்க: "அரசியல் எல்லாம் பேசவில்லை; எதார்த்தத்தை பேசுகிறேன்" ஜெயலலிதாவைப் பாராட்டி பேசிய முதல்வர் ஸ்டாலின்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழ்நாடு முழுவதும் 9,673 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 3.99 லட்சம் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 37 லட்சத்து 38 ஆயிரத்து 457 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் 58 பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 48 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கேற்ப கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆவினின் விற்பனை அளவு 10.3% அதிகரிப்பதாக நிறுவனம் கூறினாலும் கடந்த 3 ஆண்டுகளில் கொள்முதல் அளவு 10 லட்சம் லிட்டர் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விற்பனை சார்ந்த விஷயங்களில், தங்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை அளவு 50% குறைக்கப்பட்டுள்ளதாகவும், பால் அட்டைதாரர்களுக்கான விலை அதிகரிப்பால் அதன் பயன்பாடு பல பகுதிகளில் கணிசமாக குறைந்துள்ளதாகவும் பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

பச்சை பால் பாக்கெட் விற்பனை, கொழுப்புச்சத்து குறைப்பு என வெவ்வேறு விதங்களில் ஆவினைச் சுற்றிச்சூழும் சர்ச்சைகள் குறித்து அமைச்சர் மனோ தங்கராஜிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்திருக்கும் பதிலை இந்த வீடியோவில் காணலாம்.

இதையும் படிக்க: காஞ்சி: அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பா?.. மறுப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com