மளிகைக்கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் கைது

தேனி: மளிகைக்கடைக்கு சென்ற 16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்.. பெற்றோரின் புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார்.
கைதான சுப்புராஜ்
கைதான சுப்புராஜ்புதியதலைமுறை

தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் 70 வயதான முதியவர் சுப்புராஜ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த 16வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, பள்ளி ஆசிரியையிடம் வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆசிரியை மூலம் விஷயமறிந்த பெற்றோர் குழந்தைகள் நலக்குழு மற்றும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின்படி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, விசாரணைக்குப்பின் சுப்புராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அல்லிநகரம் காவல்துறையினர், அவரை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர். கடைக்கு பொருட்கள் வாங்க வந்த சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த முதியவரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான சுப்புராஜ்
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022: தேர்வானவர்கள் விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com