தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022: தேர்வானவர்கள் விவரம்!

2022ஆம் ஆண்டுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கு தேர்வான நூல்கள், ஆளுமைகள் விவரங்களை, அச்சங்கம் இன்று (டிச.12) வெளியிட்டுள்ளது.
தமுஎகச
தமுஎகசFacebook

2022ஆம் ஆண்டுக்குரிய தமுஎகச கலை இலக்கிய விருதுகளுக்கு தேர்வான நூல்கள், ஆளுமைகள் விவரங்களை, அச்சங்கம் இன்று (டிச.12) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில்,

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022

"முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, வரலாற்று ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது. அவருக்கு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

மேலும், தேர்வாகியுள்ள நூல், குறும்படம், ஆவணப்படம், ஆளுமைக்குச் சான்றிதழுடன் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பரிசுக்கான விவரம்:

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022

1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார் நூல்

காவிரி நீரோவியம் - சூர்யா சேவியர்

2. கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது: நாவல்

சலாம் அலைக் - ஷோபா சக்தி

3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு

பங்குடி - க.மூர்த்தி

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022

4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: அல்புனைவு

வித்தி வான்நோக்கும் வியன்புலம் - பெ.ரவீந்திரன்

5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு

குருதி வழியும் பாடல் - அ.சி.விஜிதரன்

6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு

நசீபு - அராபத்

7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு

ஆன்மீக அரசியல் - இ.பா.சிந்தன்

8. இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா. கோதண்டம்) விருது: குழந்தைகள் இலக்கிய நூல்

பெரியார் தாத்தா - மோ.அருண்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022

9. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல்

செவ்வியல் இலக்கண ஆய்வு: இடைச்சொற்கள் பதினெண்கீழ்க்கணக்கு - முனைவர் ஜா.கிரிஜா

10. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம்

அரிதாரம் - பி.சுரேஷ்குமார்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022

11. என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவு விருது: ஆவணப்படம்

நொச்சிமுனை தர்ஹா - ஆத்மா ஜாபிர்

12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: நாட்டுப்புறக் கலைச்சுடர்

கலைமாமணி நாகு

13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசைச்சுடர்

மழையூர் சதாசிவம்

14. த.பரசுராமன் நினைவு விருது : நாடகச்சுடர்

பேரா ராஜூ

15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை

புதிய மாதவி"

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022
தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2022

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com