மதுரை| பிறந்தநாள் கொண்டாடிய 2ம் நாள் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொ*..! 15 வயது வீரர் விபரீத முடிவு!
மதுரை மாநகர் புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேலன் - கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்றுவருகிறார். துப்பாக்கி சுடு வீரரான யுவநவநீதன் சிறுவயதில் இருந்தே மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துவெற்றிபெற்று ஏராளமான பதக்கங்களை பெற்றுவந்துள்ளார்.
மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சிபெற்றுவந்த யுவநவநீதன் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகிய நிலையில் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டவந்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சிக்கான பாயிண்ட் டூ டு என்ற வகை (ANSCHUTZ point 22 Small Fore Sports Rifle I Borrower) துப்பாக்கியை வீட்டிற்கு பயிற்சிக்காக எடுத்துசென்று வைத்திருந்துள்ளார்.
இதனிடையே, கடந்த 12 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய யுவநவநீதன் பள்ளிக்கு செல்லாமலும், எப்போதும் போல காலையில் துப்பாக்கி பயிற்சிக்கு செல்லாமலும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோர் யுவநவநீதனிடம் பள்ளிக்கு சென்று நன்கு படிக்குமாறும், ஏன் பள்ளிக்கு செல்வதில்லை என அறிவுரை கூறிவிட்டு பணிக்கு சென்றுள்ளனர். இதன் பின்னர் நேற்று யுவ நவநீதன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள் பூட்டிவிட்டு தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை யுவநவநீதனின் தந்தை பணி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது கதவு பூட்டியிருந்த நிலையில் நீண்ட நேரம் தட்டி பார்த்தபோது கதவு திறக்கவில்லை இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்து பின்னர் கதவை உடைத்து உள்ள சென்றபோது படுக்கையில் கிடந்துள்ளார். அப்போது, அருகே சென்று பார்த்தபோது மூச்சின்றி கிடந்ததோடு அருகில் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் பாயிண்ட் டூ டூ வகை துப்பாக்கி இருந்த நிலையில் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து புதூர் காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கி சுடு வீரரான யுவநவநீதனின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பல்வேறு துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வந்த துப்பாக்கி சுடு வீரர் யுவ நவநீதன் பிறந்தநாள் கொண்டாடிய 2 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெற்றோரிடையேயும், அவரது சக வீரர்களிடையையும் மீளா துயருக்கு ஆளாக்கியுள்ளது.