ஒரே கல்லில் எத்தனை மாங்காய்? தோனி மற்றும் வார்னேவின் சாதனையை ஒரே போட்டியில் முறியடிப்பாரா கம்மின்ஸ்?

மிகப்பெரும் கோலாகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் தொடங்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
dhoni, cummins
dhoni, cumminspt web

தற்போதைய சீசனில் அதிரடிக்கு பெயர்போன கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளன. ஏனெனில் இதுவரையிலான ஐபிஎல் சீசன்களில் வேறு எந்த அணியும் இல்லாத அளவிற்கு இரு அணிகளும் ரன்களைக் குவித்துள்ளன. 2021 ஆம் ஆண்டு நடந்த சீசனில் ஹைதராபாத் கடைசி இடத்தைப் பிடித்திருந்தது. 2022ல் எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. 2023 ஆம் ஆண்டு மீண்டும் கடைசி இடத்தை பிடித்திருந்தது. கொல்கத்தா அணியோ 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 7 ஆவது இடத்தை மட்டுமே பிடித்திருந்தது. ஆனால் தற்போதைய தொடரில் இரு அணிகளும் பைனலுக்கு முன்னேறியுள்ளது.

kkr vs srh
kkr vs srhpt web

தொடக்கத்தில் வீரர்கள் தேர்வில் இரு அணிகளும் பல விமர்சனங்களைச் சந்தித்தன. ஏனெனில், 2 கோடி அடிப்படை விலைக்கு வந்த பாட் கம்மின்ஸுக்கு முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டிப்போட்டன. ஆனால் இறுதியில் பேட் கம்மின்ஸை 20.5 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி தட்டிச் சென்றது. சிறுது நாட்களில் அவரை கேப்டனாகவும் நியமித்தது.

dhoni, cummins
IPL Final: மழையால் பயிற்சி ரத்து! Reserve Day-ம் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை?

எய்டன் மார்க்ரம் பதிலாக கம்மின்ஸ்

மார்க்ரம் - கம்மின்ஸ்
மார்க்ரம் - கம்மின்ஸ்X

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி நிர்வாகத்தின் மற்றொரு அணியான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை தொடர்ச்சியாக 2 கோப்பைகளுக்கு அழைத்துச்சென்ற கேப்டன் எய்டன் மார்க்ரம் ஒரு சிறந்த டி20 கேப்டனாக தன்னை நிலைநிறுத்தினார். ஆனால், இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்ற கம்மின்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக செயல்படாத ஒருவரை 20.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததும், அவரையே கேப்டனாக ஆக்கியதும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து ஹைதராபார்த் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்துள்ளார் கம்மின்ஸ்.

வார்னே சாதனையை முறியடிப்பாரா?

இந்நிலையில் அவர் இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினால், 2008 லெஜண்ட் ஷேன் வார்னே படைத்த, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையையும் முறியடிப்பார். தற்போதைய தொடரில் இதுவரை 15 போட்டிகளில் 17 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் கம்மின்ஸ். இது அவரது மற்ற சீசன்களில் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கையை விட அதிகம். அவர் இன்னும் 3 விக்கெட்களை வீழ்த்தினால், 2008 எட்டாம் ஆண்டு ஷேன் வார்னே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக 19 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் 20 விக்கெட்களை வீழ்த்தினால், கேப்டனாக அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமையை கம்மின்ஸ் பெறுவார்.

dhoni, cummins
’இடது கை ஓப்பனர்+ பகுதிநேர ஸ்பின்னர்’! ஜெய்ஸ்வாலா? அபிஷேக் சர்மாவா? இந்திய அணிக்கு ஹர்பஜன் கோரிக்கை!

தோனி சாதனையை சமன் செய்வாரா கம்மின்ஸ்?

அதேபோல் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையையும் கம்மின்ஸ் முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையை, இந்திய அணியின் கேப்டனாக தோனி வென்று கொடுத்தார். அதேபோல் அடுத்து நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில், பெங்களூரு அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணியை கோப்பை வெல்ல வைத்தார். அதேபோல், ஹைதராபாத் அணியின் கேப்டனான கம்மின்ஸ் கடந்தாண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினார். இந்நிலையில் உலகக்கோப்பைக்கு பின் நடக்கும் ஐபிஎல் தொடரையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் பனி முக்கியப் பங்காற்றுமென கூறப்படுகிறது. குவாலிபயர் 2 ஆம் போட்டியில் பனியின் தாக்கம் அதிகம் இல்லை என்றாலும், இன்று நடக்கும் போட்டியில் பனியின் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhoni, cummins
“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com