’இடது கை ஓப்பனர்+ பகுதிநேர ஸ்பின்னர்’! ஜெய்ஸ்வாலா? அபிஷேக் சர்மாவா? இந்திய அணிக்கு ஹர்பஜன் கோரிக்கை!

ஒருவேளை அபிஷேக் சர்மா அணியில் இடம்பெற்றால் இந்திய அணிக்கு கூடுதலாக ஒருபவுலிங் ஆப்சன் என 7 பவுலர்களை ரொட்டேட் செய்யும் வாய்ப்பு கேப்டனுக்கு கிடைக்கும்.
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாweb

2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பை வெல்வதற்கான போட்டியில் 10 அணிகள் தீவிர பலப்பரீட்சை நடத்திய நிலையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” முதலிய 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

குவாலிஃபையர் 1 மோதலில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது.

srh
srh

இந்நிலையில் எந்த அணி இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு பதிலாக, குவாலிஃபையர் 2 சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியில் 176 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, வெல்லவேண்டிய இடத்திலிருந்த போட்டியை தங்களுடைய சுமாரான பேட்டிங் மூலம் கோட்டைவிட்டு வெளியேறியது.

அபிஷேக் சர்மா
IPL| MI தொடர் தோல்விக்கு குடும்ப பிரச்னை காரணமா.. மனைவியைப் பிரிகிறாரா ஹர்திக் பாண்டியா?

ஒரு சிதறடிக்கும் இடது கை ஓப்பனர் + பகுதிநேர ஸ்பின்னர்!

ராஜஸ்தான் அணியின் இரண்டு நட்சத்திர ஸ்பின்னர்களை விட, சன்ரைசர்ஸ் அணியின் இடது கை ஸ்பின்னர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஷபாஷ் அகமது இருவரும் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் நடப்பு ஐபிஎல் தொடர் முழுவதும் பந்தே வீசாத அபிஷேக் சர்மா, குவாலிஃபையர் 1 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் என்ற இரண்டு முக்கியமான வீரர்களையும் வெளியேற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறினார்.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

இந்திய அணியில் இடது கை ஓப்பனர்கள் இல்லாத சூழலில்தான், பெரிய ஃபார்மில் இல்லாத போதும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இந்திய அணி உலகக்கோப்பைக்கு அழைத்துச்சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது ஐபிஎல்லில் ஓப்பனராக களமிறங்கி அதிரடியில் மிரட்டுவது மட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் அபிஷேக் சர்மா அணிக்கு உதவிசெய்கிறார். ஒருவேளை அபிஷேக் சர்மா அணியில் இடம்பெற்றால் இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பவுலிங் ஆப்சன் என 7 பவுலர்களை ரொட்டேட் செய்யும் வாய்ப்பு கேப்டனுக்கு கிடைக்கும்.

அபிஷேக் சர்மா
ராஜஸ்தான் தோல்விக்கு RCB தான் காரணம்.. ஒரேயொரு முடிவால் வீழ்ந்த RR! 3வது முறையாக FINAL சென்றது SRH!

அவர் இந்திய அணியில் விளையாட தகுதியானவர்..

அபிஷேக் சர்மாவின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் ஒரு கூடுதல் இடதுகை ஸ்பின்னர் அணியில் இருப்பது என அனைத்து வகையில் சிறந்த தேர்வாக இருக்கும் பட்சத்தில், ஏன் அவரை அணியில் எடுத்துச்செல்லக் கூடாது என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

abishek sharma
abishek sharma

இதுகுறித்து பேசியிருக்கும் ஹர்பஜன் சிங், “அபிஷேக் சர்மா டி20 உலகக்கோப்பையில் விளையாட இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா செல்ல வேண்டும். அவர் இந்தியாவுக்காக விளையாட தகுதியானவர். இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், அதனால் மாற்றங்களைச் செய்ய இன்னும் ஒரு நாள் உள்ளது. பேட் மற்றும் பந்தில் பங்களிக்கும் அவரைப் போன்ற வீரர்கள் அணிக்கு தேவை, ஒரு ஸ்பின்னரை வெளியேற்றிவிட்டு அபிஷேக் சர்மாவை அணிக்குள் எடுங்கள்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

அபிஷேக் சர்மா
‘இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை..’! சஞ்சு சாம்சனை சாடிய சுனில் கவாஸ்கர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com