IPL Final: மழையால் பயிற்சி ரத்து! Reserve Day-ம் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை?

2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் போட்டி ரிசர்வ் டேவுக்கு தள்ளிப்போகும், ஒருவேளை ரிசர்வ் டேவிலும் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை செல்லும்? என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சென்னை சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம்x

2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பை வெல்வதற்கான போட்டியில் 10 அணிகள் தீவிர பலப்பரீட்சை நடத்திய நிலையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” முதலிய 4 அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

குவாலிஃபையர் 1 மோதலில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது.

KKR vs SRH
KKR vs SRH

இந்நிலையில் எந்த அணி இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு பதிலாக, குவாலிஃபையர் 2 சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியில் 176 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, வெல்லவேண்டிய இடத்திலிருந்த போட்டியை தங்களுடைய சுமாரான பேட்டிங் மூலம் கோட்டைவிட்டு வெளியேறியது.

சென்னை சேப்பாக்கம்
’இடது கை ஓப்பனர்+ பகுதிநேர ஸ்பின்னர்’! ஜெய்ஸ்வாலா? அபிஷேக் சர்மாவா? இந்திய அணிக்கு ஹர்பஜன் கோரிக்கை!

இறுதிப்போட்டியில் மழையின் பாதிப்பு இருக்குமா?

கோப்பை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர்த்து புதிய அணி கோப்பை வெல்வதை பல ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆனால் ஒரு விறுவிறுப்பான ஐபிஎல் இறுதிப்போட்டியை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு, மழையின் பாதிப்பு இருக்கும் என்ற தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தின் தலைசிறந்த டி20 லீக்கின் இறுதிப்போட்டியை அனைத்து ரசிகர்களும் முழுபோட்டியாக பார்க்கவே காத்திருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கம்

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் வானம் இருக்கும் என்றும், போட்டி தொடங்கும் நேரத்தில் மழை வர வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் நீண்டநேர மழை இருக்காது என்றும், போட்டி உறுதிசெய்யப்பட்ட நாளில் நிறைவுபெறும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம்
‘இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை..’! சஞ்சு சாம்சனை சாடிய சுனில் கவாஸ்கர்!

பயிற்சி நேரத்தில் குறுக்கிட்ட மழை!

நாளை மே 26 ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவிருக்கும் நிலையில், இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது கொல்கத்தா அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, மழை குறுக்கிட்டதால் பயிற்சி அமர்வு ரத்து செய்யப்பட்டது.

accuweather.com அறிக்கையின் படி நாளை மாலை 66% ஈரப்பதத்துடன் அதிகப்படியான மேக மூட்டம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மேகமூட்டம் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம்
“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

Reserve Day-லும் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? யாருக்கு கோப்பை?

ஒருவேளை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது மழை குறுக்கிட்டால், போட்டியானது ரிசர்வ் டேவான மறுநாளுக்கு தள்ளிவைக்கப்படும். ஆனால் அதற்கு முன் அசல் நாளிலேயே போட்டியை முடிக்கும் விதமாக கூடுதலாக 120 நிமிடங்கள் காத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை போட்டி பாதிக்கப்பட்டு ரிசர்வ் டே-க்கு சென்று, திங்கள் கிழமையும் மழை வந்து போட்டி கைவிடப்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். அப்படிப்பார்த்தால் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றதாக அறிவிக்கப்படும். எப்படியிருப்பினும் தங்களுடைய ஹீரோக்கள் கோப்பை வெல்வதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம்
ராஜஸ்தான் தோல்விக்கு RCB தான் காரணம்.. ஒரேயொரு முடிவால் வீழ்ந்த RR! 3வது முறையாக FINAL சென்றது SRH!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com