IPL | ‘ஜடேஜாவுக்கு நடந்தது ருத்துராஜுக்கு நடக்கக்கூடாது..’ கடைசி நேரத்தில் தோனி போடும் கணக்கு என்ன?

“அணியின் எதிர்கால நலன் கருதியே கேப்டன்ஷிப் நியமன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என்று தோனி கூறியதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டது. சரியான முடிவுகளை எடுப்பதில் தோனி சிறப்பானவர்”
dhoni
dhonipt

17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கும் நிலையில், நடப்பு சாம்பியனான சென்னையும், பெங்களூரு அணியும் களம் காண இருக்கின்றன. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதைப் போல சிஎஸ்கே அணியின் தூணாக, கப்பலின் கேப்டனாக அணியை வெற்றிப்பாதையில் வழிநடத்தி வந்த தோனி, இந்த முறை இளம் தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கிறார்.

அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டாலும், தோனி அவருக்கு முழு சுதந்திரம் அளிப்பாரா? நடப்பு தொடரில் தோனியில் ரோல் என்னவாக இருக்கும்? ருத்துராஜ் கெய்க்வாட் வெறும் பொம்மை கேப்டனாக செயல்படுவாரா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. தோனியின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? உள்ளிட்ட மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

dhoni
“எங்களுக்கே கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தெரியும்” - கேப்டன் மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

சிஎஸ்கேவின் ஆணி வேர் தோனி!

2008ம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே கேப்டனாக இருந்து வந்த தோனி, இதுவரை 226 ஆட்டங்களில் கேப்டனாக விளையாடி 5 முறை கோப்பையை பெற்றுத்தந்துள்ளார்.

MS Dhoni
MS DhoniPTI

சிஎஸ்கே அணிக்கு 2வதாக அதிக ரன்களை, அதாவது 4,508 ரன்களை வைத்துள்ள தோனி கேப்டனாக 133 ஆட்டங்களில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். ஒரு விக்கெட் கீப்பராக 138 கேட்சுகள், 42 Stumpings ஐ நிகழ்த்தியுள்ள தோனி, அணியின் ஆணி வேராகவே இருந்து வருகிறார்.

2022ல் தோனி எடுத்த முடிவு!

இப்படியாக இருக்க 2022ம் ஆண்டு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஜடேஜாவுக்கு வழிவிட்டார் தோனி. இருப்பினும், ஜடேஜா தலைமையிலான அணி தொடர் தோல்விகளை சந்தித்ததால், மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனி வசம் வந்தது. காலம் கடந்த முடிவு என்பதால், அந்த ஆண்டு சிஎஸ்கே மோசமான தோல்வியை சந்தித்தது.

ஜடேஜாவை தோனி சுதந்திரமாக இயங்கவிடவில்லை என்ற குற்றசாட்டுகள் இருந்தாலும், அவை வெறும் குற்றச்சாட்டுகளே தவிர உண்மையில்லை என்பதே நிதர்சனம். ஆம், அறிவுரையை மட்டுமே வழங்கி பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பராகவே அந்த சீசனில் குறிப்பிட்ட போட்டிகளில் செயல்பட்டார் தோனி. இந்நிலையில், கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் தொடர்ந்த தோனி, 5வது முறையாக கோப்பையை கைப்பற்றினார்.

dhoni
தலைப்புச் செய்திகள்|டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது To சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதில் புதிய கேப்டன்!

ருத்துராஜ் எப்போது வந்தார்?

42 வயதான இவர், இந்த சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வுபெறுவார் என்று கூறப்படும் நிலையில், கேப்டன் பொறுப்பு ருத்துராஜுக்கு கொடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவரும் ருத்துராஜ், தோனி எனும் குருவுக்கு நல்ல சிஷ்யன் என்றே சொல்லலாம். குறிப்பாக கடந்த ஆண்டு ஆசிய அளவிலான போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வெற்றியை உறுதி செய்திருந்தார் ருத்துராஜ்.

dhoni
”CSK இப்போதே 20% மோசமான அணியாகிவிட்டது!” - கேப்டனாக தோனி இல்லாததால் முன்னாள் ENG வீரர் விமர்சனம்!

பந்துவீசுகிறாரா தோனி? 

ஒரு அணியின் தலைவனாக யாரை எங்கே விளையாட வைக்க வேண்டும் என்று இதுநாள் வரை முடிவெடுத்து வந்த தோனி, தனக்குப் பிறகு சிஎஸ்கே அணி வலுவான அணியாகவே தொடரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தான் ஆணியில் இருக்கும்போதே இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக மாற்றி அவர் தலைமையில் ஒரு வலுவான அணியாக சிஎஸ்கேவை மாற்ற வேண்டும் என தோனி நினைத்திருக்க வேண்டும்.

தோனி இல்லாமல் சிஎஸ்கே வலுவான அணி இல்லை என்று கூற முடியாத அளவுக்கு அணியை கட்டமைக்க வேண்டும் என்று எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாகவே கூறப்படுகிறது. ருத்துராஜ் பொம்மை கேப்டனாக பயன்படுத்தப்படுவாரா என்ற கேள்விகளுக்கெல்லம் இடம் கொடுக்காமல், விக்கெட் கீப்பர், பேட்டராக மட்டுமே இந்த முறை தோனி பங்களிப்பை கொடுப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கேப்டன் ருத்துராஜுக்கு அறிவுரைகளை கூறி, ஆணைகளை பிறப்பிக்காமல் ஒரு நல்ல வழிகாட்டியாக, ஆசானாக தோனி தொடர்வார் என்பதே உண்மை.

dhoni
”சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” - CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

இதுதான் சரியான நேரம் என்று சொன்ன தோனி!

கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து பேசியுள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், “அணியின் எதிர்கால நலன் கருதியே கேப்டன்ஷிப் நியமன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என்று தோனி கூறியதாலே இந்த முடிவு எடுக்கப்பட்டது. சரியான முடிவுகளை எடுப்பதில் தோனி சிறப்பானவர். அவரது உடல் தகுதி நன்றாக இருக்கிறது. பயிற்சியின்போது பந்துகளை நன்றாக விளாசுகிறார்” என்று கூறியுள்ளார்.

அதன்படி, தான் இருக்கும்போதே ஒரு அணியை எப்படி சிறப்பாக கையாளுவது என்று புதிய கேப்டன் ருத்துராஜுக்கு பாடம் எடுத்து அணியை வலுப்படுத்துவது என்ற நோக்கத்துடன் தோனி இந்த முடிவை எடுத்துள்ளது உறுதியாகிறது. மேலும், இந்த சீசனில் ஆச்சரியத்தை உண்டாக்கும் வகையில் தோனி பந்துவீச்சிலும் ஈடுபடுவாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காரணம், சில வாரங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் பதிவிட்ட தோனி, புதிய ரோலில் விளையாட இருக்கிறேன் என்று கூறியிருந்தார். சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி இன்னும் என்னவெல்லாம் சஸ்பென்ஸ் தருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

dhoni
‘பவுன்சர்கள் வீசுவதில் மாற்றம்’ முதல் ’SRS சிஸ்டம்’ வரை.. 2024 IPL-ல் அறிமுகமாகும் புதிய விதிகள்!

2017ல் கோலி.. இப்போது ருத்துராஜ்.. 

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய விஷயம், இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, தான் கெரியரில் இருக்கும்போதே 2017ம் ஆண்டு பொறுப்பில் இருந்து விலகி, விராட் கோலிக்கு பொறுப்பு கொடுத்து, அவர் தலைமைக்கு கீழ் விளையாடி அணியை எப்படி வலுப்படுத்தினாரோ, அதேபோல் சென்னை அணியை வலுப்படுத்த ஆகச்சிறந்த முடிவு எடுத்ததுதான் சிறப்பு என்று சிலாகிக்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனை மாற்றும்போது, அங்கு பெரும் சர்ச்சை வெடித்தது, பெங்களூரு அணியை தோல்வி துறத்தியபோது கோலிக்கு பதில் டூ பிளசிஸிடம் பொறுப்பு தரப்பட்டது. ஆனால் சென்னை அணிக்கு கேப்டன் மாற்றப்பட வேண்டும் என்று சரியான நேரம் பார்த்து இளம் தலைமுறைக்கு தானே வழிவிட்டு ஒதுங்கி, ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார் தோனி. பத்துதல பாடல் வரிகளுக்கு ஏற்ப, உன் பேரை ஓரம் தள்ளி, அணியை வலுப்படுத்த இப்படி ஒரு முடிவை எடுத்த நீ எப்போதும் சிங்கம்தான் தோனி.. என்றென்றும் போற்றப்படுவீர்கள்.

- யுவபுருஷ்

dhoni
’இந்த 5 விசயங்களில் இவர்தான் மாஸ்டர்’.. கேப்டனாக கோலோச்சிய தோனியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com