தலைப்புச் செய்திகள்|டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது To சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதில் புதிய கேப்டன்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது அரவிந்த் கெஜ்ரிவால் கைது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
 • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக அர்விந்த கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ள வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

 • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், ‘ பயத்தின் பிடியில் உள்ள ஒரு சர்வாதிகாரி உயிரற்ற ஜனநாயகத்தை உருவாக்க முயற்சிக்கிறார் ‘ என ராகுல் காந்தி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 • அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து அருவருக்கத்தக்க நிலைக்கு பாரதிய ஜனதா தரம் தாழ்ந்துள்ளதாகவும், கைது நடவடிக்கை எந்த பலனையும் தராது எனவும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 • அதிகாரத்தில் இருப்பவர் தவறு செய்தாலும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும் என அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

 • நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தியை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் களமிறங்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 • தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.இந்நிலையில், கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை, நீலகிரியில் எல்.முருகன் போட்டி என அறிவிப்பு.

 • வேட்பாளர் பட்டியல் வெளியான சிறிது நேரத்திலேயே தூத்துக்குடிக்கு பதிலாக நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என பட்டியலில் திருத்தம் மேற்கொண்டது பாஜக.

 • ராமநாதபுரம் தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார்.இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கீகாரமும், அன்பும் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

 • தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

 • மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கூறியிருப்பதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

 • 17 பேர் கொண்ட இரண்டாவது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக.மேலும், மாற்றுக்கட்சியில் இருந்து வந்த 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 • தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

 • வரும் 24 ஆம் தேதி கூட்டணியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் என பிரேமலதா பேட்டியளித்துள்ளார்

 • மக்களவைத் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதல் நாளான இன்று திருச்சி சிறுகனூரில் பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 • எஸ்.பி.ஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம்.

 • பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க இன்று வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

 • தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஷோபா மீது பெங்களூரு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

 • சென்னை கொளத்தூரில் வீட்டில் அறிவியல் பரிசோதனை செய்த போது சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.

 • கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை மாயம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

 • அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.11 மணி நேர சோதனைக்குப் பிறகு சில ஆவணங்களை கைப்பற்றி திரும்பிச் சென்றதாக தகவல்.

 • 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐயின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தலாமா? என இன்று உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

 • 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

 • நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அணியில் தோனி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com