“எங்களுக்கே கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் தெரியும்” - கேப்டன் மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன?

2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகி, புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனி - பிளெமிங்
தோனி - பிளெமிங்X

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. 2022 ஆம் ஆண்டு ஜடேஜாவை புதிய கேப்டனாக கொண்டு வந்தபோதும் இடையிலேயே மீண்டும் தோனி கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் புதிய சீசன் புதிய ரோல் என்று தோனி சன்பென்ஸ் கொடுத்து இருந்தார். அதன்படி, நாளை நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் செயல்படுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

dhoni
dhoni

அணியின் அடுத்த நகர்தலுக்கான முக்கிய முடிவாக இது பார்க்கப்பட்டும் நிலையில், கேப்டன்சி மாற்றம் குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் பேசியுள்ளார்.

தோனி - பிளெமிங்
“தோனி எனக்கு செய்த செயலுக்காக என் வாழ்நாள்..” அஸ்வினுக்கு 1 கோடி பரிசு! பாராட்டிய முன்.வீரர்கள்!

அணியின் எதிர்காலத்திற்கான தோனியின் முடிவு!

இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி எடுத்த முடிவு இது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கேப்டன்சி குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில் ருத்துராஜ் சிறப்பாக செயல்பட்டார்.

புதிய கேப்டன் நியமனம் செய்ய இதுவே சரியான நேரம் என தோனி கருதியதின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணியில் பல வீரர்கள் கடந்த ஆண்டு காயமடைந்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் எனவே பந்து வீச்சில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்படுவோம்.

எம்.எஸ். தோனி காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 2022ஆம் ஆண்டு ஜடேஜா-வை கேப்டனாக நியமனம் செய்ததில் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் தற்போது கற்றுள்ளோம். எனவே கடந்த முறை இல்லாத வகையில் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம். ஜடேஜா முழுமையாக ருத்துராஜ் கெய்க்வாட் பக்கம் உள்ளார்.

அணியின் கேப்டனாக முடிவுகளை ருத்ராஜ் எடுப்பார். இருந்தாலும் நிச்சயம் அவர் தோனி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் அலோசனையை மைதானத்தில் பெறுவார். அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை” என்றார்.

தோனி - பிளெமிங்
சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? தோனியே கொடுத்த சர்ப்ரைஸ் அப்டேட்! யார் மாற்று கேப்டன்?

அணி உரிமையாளருக்கே காலையில் தான் தெரியும்!

dhoni
dhoni

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “கேப்டன்கள் சந்திப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கே இந்த விஷயம் தெரியும். இது அவருடைய முடிவு. இந்த முடிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். தோனி எது செய்தாலும் அது அணியின் நலனுக்காகவே இருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நிச்சயம் தோனி ருதுராஜ் இடம் கலந்து பேசியிருப்பார். ஆனால், இன்று காலை தான் அணி உரிமையாளருக்கே இந்த முடிவை தெரிவித்தோம்” என்றார்.

தோனி - பிளெமிங்
’முடிவுக்கு வந்தது Dhoni-ன் கேப்டன்சி சகாப்தம்’! CSK-ன் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com