ஓராயிரம் கேள்விகள்... கோப்பை வென்று பதில் சொன்ன ரோஹித் & கோலி!

இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேவையான நேரத்தில் அவர்களே முன்னின்று செயல்பட்டு இந்திய அணியை சாம்பியன் ஆக்கியிருக்கிறார்கள்.
rohit, virat
rohit, viratx page

2024 டி20 உலகக் கோப்பை சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது இந்திய அணி. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்களில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது ரோஹித் அண்ட் கோ. இந்தத் தொடருக்கு முன்பாக சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்த நிலையில், தேவையான நேரத்தில் அவர்களே முன்னின்று செயல்பட்டு இந்திய அணியை சாம்பியன் ஆக்கியிருக்கிறார்கள். தங்கள் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் கோப்பை மூலம் பதில் சொல்லி விடைபெற்றிருக்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்த உலகக் கோப்பைக்கான டி20 அணி அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக இந்திய அணி எப்படி இருக்கவேண்டும் என்று பல விவாதங்கள் எழுந்தன. இளம் வீரர்கள் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும்போது, சீனியர்கள் அணியில் தேவையா என்று கேள்வி எழுப்பினார்கள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஐசிசி கோப்பையும் வெல்லாததால், இந்திய அணி தைரியமான சில முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற வாதங்கள் எழுந்தன.

ஹர்திக் தலைமையில் ஒரு இளம் அணியை அனுப்பவேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் அணிக்குத் தேவையா என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

இதையும் படிக்க: T20WC 2024 | உலகக்கோப்பையுடன் ஓய்வு... சத்தமின்றி 7 சாதனைகளைப் படைத்த ரோகித் சர்மா!

rohit, virat
கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

கேப்டன் ரோஹித் மீதான விமர்சனங்கள் மிகவும் அதிகமாகவே இருந்தன. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 தொடர்களில் அவருடைய செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது. ஐபிஎல் அரங்கில் அவரால் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. அது தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டே இருந்தது. கேப்டனாக அவர் சூப்பர் என்றாலும் அவரது பேட்டிங் டி20 ஃபார்மட்டில் மிகவும் மோசமாக இருந்தது.

அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 ஃபார்மட்டில் கோலியின் ஸ்டிரைக் ரேட் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப் பட்டது. ஐபிஎல் தொடரில் அவர் நிறைய ரன்கள் எடுத்தாலும் போதுமான ஸ்டிரைக் ரேட்டில் ஆடுவதில்லை என்று குறை கூறினார்கள். அனைத்து அணிகளும் அதீத அதிரடி காட்டுவதால் இந்த இரு சீனியர்களும் டி20 உலகக் கோப்பைக்கு செட் ஆகமாட்டார்கள் என்றார்கள். அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கும் இளம் ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால், கில், ருதுராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டபோது பெரிதாக எந்த சர்ப்ரைஸும் இருக்கவில்லை. கோலி, ரோஹித்தோடு ஜெய்ஸ்வால் மட்டுமே ஓப்பனராக இடம்பெற்றார். இருந்தாலும் இந்தியா யாரை ஓப்பனர்களாக இறக்கும், கோலியின் பேட்டிங் பொசிஷன் எது என்று பல கேள்விகள் எழுந்தன. ரோஹித்தால் இந்த தொடரிலாவது நன்றாக ஆட முடியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கெல்லாம் உலகக் கோப்பையில் இந்த இரு சீனியர்களும் பதில் சொல்லிவிட்டார்கள்.

இதையும் படிக்க: T20 WC தோல்வி | கவலையில் ஆழ்ந்த தென்னாப்பிரிக்கா வீரர்கள்.. அருகில் சென்று ஆறுதல் சொன்ன ரிஷப் பண்ட்!

rohit, virat
விராட், ரோகித் இரு ஜாம்பவான்கள் ஓய்வு.. வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடிய ட்ராவிட்.. என்ன நடந்தது நேற்று?

இந்த உலகக் கோப்பையை அரைசதத்தோடு அசத்தலாகத் தொடங்கிய ரோஹித், அனைவரும் கூறியதைப் போலவே அதன்பிறகு சொதப்பினார். அடுத்த 4 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தம் 47 ரன்கள் தான் அடித்தார் இந்திய கேப்டன். ஆனால் மிகவும் முக்கியமான தருணத்தில் தன் கிளாசை காட்டினார் அவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 சுற்றிப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் அவர். இந்த உலகக் கோப்பையின் அதிவேக அரைசதத்தை (19 பந்துகளில்) எடுத்தவர், 41 பந்துகளில் 92 ரன்கள் குவித்து வெளியேறினார். அதனால் இந்தியா 200 ரன்களைக் கடக்கவும் அந்தப் போட்டியை வெற்றி பெறவும் காரணமாக இருந்தார் அவர்.

அடுத்தது இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் அதே ஆட்டத்தைத் தொடர்ந்தார். மழையால் போட்டி தடைபட்டாலும், ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினம் ஆனாலும் ரோஹித் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லை. 39 பந்துகளில் 57 ரன்கள் விளாசி வெளியேறினார் அவர். யாருடைய பேட்டிங் விமர்சிக்கப்பட்டதோ அவர், இந்த உலகக் கோப்பையின் இரண்டாவது டாப் ஸ்கோரராக அவதாரம் எடுத்தார்.

இதையும் படிக்க: T20 WC 2024 | ரோகித், கோலி ஓய்வு.. “இருவரையும் மிஸ் செய்வோம்” - ஹர்திக் பாண்டியா

rohit, virat
“என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது” - உலகககோப்பையை வென்ற இந்திய அணிக்கு தோனி வாழ்த்து

கோலியின் கதை இன்னும் டிராமாக்கள் நிறைந்தது. டி20 உலகக் கோப்பையின் டாப் ஸ்கோரராக தொடருக்குள் நுழைந்தார் அவர். ஆனால் இந்த உலகக் கோப்பை அவருக்கு மிகமோசமாக அமைந்தது.1,4,0, 24, 37, 0, 9 என அவரது ஸ்கோர்கள் மிகவும் சுமாராக இருந்தன. அதனால் அவர்மீது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் கொடுக்கக்கூடிய ஜெய்ஸ்வாலை பெஞ்சில் அமரவைத்துவிட்டு கோலியை தொடர்ந்து ஓப்பனராக இறக்கிக்கொண்டிருப்பது கேள்விகளை எழுப்பியது. இந்திய அணிக்கும் அந்த மோசமான தொடக்கம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அரையிறுதி போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கூட இதுபற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "15 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய ஒருவருக்கு ஃபார்ம் பிரச்சனையாக இருக்காது. கோலி தன்னுடைய பெஸ்ட்டை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம்" என்று கூறினார்.

அவர் சொன்னது அவ்வளவு உண்மையாக அமைந்தது. எல்லோரும் சொல்வார்களே, மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் மிக முக்கியமான, மிகவும் கடினமான சூழ்நிலைகளில் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள் என்று, அது உண்மை தான் என்று நிரூபித்தார் விராட். முதல் ஓவரில் 3 ஃபோர்கள் அடித்து அதிரடியாகத் தொடங்கிய கோலி, அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் தன் அணுகுமுறையை மாற்றினார். விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள நிதானம் காட்டினார். அவரது அனுபவம் இந்திய அணிக்குப் பெரிய அளவு கைகொடுக்க, இந்தியா 176 ரன்கள் விளாசியது. அதில் அந்த 76 விராட் அடித்தது. மிகவும் கடினமான கட்டத்திலிருந்து இந்திய அணியை மீட்டெடுத்த அவர் ஆட்ட நாயகன் விருதும் வாங்கி அசத்தினார்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி சாதித்தவை என்னென்ன தெரியுமா?

rohit, virat
இந்திய அணியின் வீரராக, கேப்டனாக செய்ய முடியாததை பயிற்சியாளராக சாதித்த ராகுல் டிராவிட்!

தொடருக்கு முன்பு அத்தனை விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், இந்த இரு சீனியர்களும் முன்னின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இதோடு தங்களின் டி20 கரியரையும் முடித்துக்கொள்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

ஃபார்ம் மட்டுமல்லாமல் இருவரின் உறவு பற்றியும் அவ்வளவு கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் தங்களின் செயல்பாடுகளால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லியிருக்கிறார்கள். 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் வென்று கொடுத்தபோது ரோஹித் அவரைத் தூக்கியதாகட்டும், இந்த அரையிறுதிக்குப் பின் விராட்டுக்கு ஆதரவாகப் பேசியதாகட்டும், இல்லை கோலி எந்த ஈகோவும் இல்லாமல் ரோஹித்தோடு களத்தில் ஆலோசிப்பதாகட்டும்... இருவரும் இளைஞர்களுக்குப் பாடமாகவும் இருந்திருக்கிறார்கள், தங்களை விமர்சித்தவர்களுக்கு பாடமும் எடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க: UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

rohit, virat
T20WC Final |”இந்த ஃபைனலிலும் தோற்றால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார்” - கங்குலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com