கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா அணியை இந்தியா வீழ்த்தி சாம்பியன் ஆகி உள்ளது.
இந்தியா
இந்தியாஎக்ஸ் தளம்

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவும் தென்னாப்ரிக்காவும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். இதையடுத்து, வழக்கம்போல் விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். கடந்த 2 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், இன்றைய 9 போட்டியில் 9 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

அவருக்குப் பின் வந்த ரிஷப் பண்ட்டும் டக் அவுட் முறையில் வீழ்ந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அவருக்கு அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்வும் 3 ரன்களில் நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 4.3 ஓவர்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம் கண்டது. ஆனால் பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் ஆட்டத்தின் பொறுப்புணர்ந்து விராட் கோலியுடன் இணைந்து விளையாட ஆரம்பித்தார். இன்னும் சொல்லப்போனால், அவர் தன்னுடைய ஆட்டத்தில் அதிரடியைக் காட்டினார். அவ்வப்போது சிக்ஸர் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். ஆனால், விராட் கோலியோ ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தார். அவர் அரைசதத்தையே 48 பந்துகளில்தான் கடந்தார்.

இதையும் படிக்க:'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

இந்தியா
சரிந்த விக்கெட்டுகள்.. அக்‌ஷர் அபாரம், அரைசதம் அடித்த விராட் கோலி - இந்தியா 176 ரன்கள் குவிப்பு

ஆனால் அவருக்குப் பின் வந்த அக்சர் படேல் அதிரடியாய் ஆடி 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் அரைசதம் அடித்ததற்குப் பிறகு விராட் கோலி சற்று அதிரடி காட்டினார். இறுதியில் அவர் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் மட்டும் ஆரம்பம் முதலே தடுமாற்றமின்றி விளையாடி இருந்தால், இந்திய நிச்சயம் 200 ரன்களைக் குவித்திருக்கும்.

எனினும், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. தென்னாப்ரிக்கா அணி தரப்பில் நோர்டியா மற்றும் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஜான்சென் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையும் படிக்க: குஜராத்| பிரதமர் மோடியால் 2023-ல் திறக்கப்பட்ட விமான நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்துவிழுந்து விபத்து!

இந்தியா
இந்தியா vs தென்னாப்ரிக்கா: இரு அணிகளும் கடந்து வந்த பாதை.. பலம், பலவீனம் என்ன?

இதைத் தொடர்ந்து பின்னர் ஆடத் தொடங்கிய தென்னாப்ரிக்கா அணி, 2வது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. 4 ரன்கள் எடுத்திருந்த ரீஷா ஹெண்டிரிக்ஸை பும்ரா போல்டாக்கி வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து கேப்டன் மார்க்ராமையும் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். இவர்கள் வெளியேறினாலும் டிகாக் மற்றும் ஸ்டப்ஸ் அதிரடி காட்டினர். இதனால் தென்னாப்ரிக்கா ஸ்கோர் ஏறிய வண்ணம் இருந்தது. அப்போது 9வது ஓவரை வீசிய அக்சர் படேல் ஸ்டப்ஸை 31 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார்.

என்றாலும் பின்னர் களமிறங்கிய கிளாஸன் அதிரடியில் கலக்கினார். இதற்கிடையே இந்திய அணியை கதிகலங்க வைத்த டிகாக், 39 ரன்களில் அர்ஷீப் பந்தில் குல்தீப் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதேநேரத்தில், மறுமுனையில் நின்ற கிளாசன் 23 ரன்களில் அரைசதத்தை அடித்ததுடன், அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், ஹர்திக் பாண்ட்யா பந்தில் பாண்டியாவிடம் வீழ்ந்தார். அதுவரை தென்னாப்ரிக்காவின் கையில் இருந்த வெற்றி, அதன்பிறகு இந்தியா வசம் வந்தது.

இதையும் படிக்க: மாலத்தீவு | அதிபருக்கு சூன்யம் வைத்ததாக 2 அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணை தீவிரம்!

இந்தியா
INDvSA | டி20 உலகக் கோப்பை சாம்பியன் யார்... தென்னாப்பிரிக்காவோடு பலப்பரிட்சை நடத்தும் இந்தியா..!

அப்போது அந்த அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது 18 ஓவரை வீசிய பும்ரா ஜேன்சனின் விக்கெட்டை எடுத்து மேலும் ஆட்டத்தை மாற்றி விறுவிறுப்பை கூட்டினார். அதுபோல் 19வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். இதனால், இந்திய ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டனர். அப்போது தென்னாப்ரிக்கா அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களாக இருந்தது.

இதனால் கடைசி ஒரு ஓவரில், 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தென்னாப்ரிக்கா தள்ளப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் பந்திலேயே மில்லரை வெளியேற்றினார். அந்த பந்தை பவுண்டரி எல்லைக்குத் தூக்கியடித்தபோது, சூர்யகுமார் யாதவ் அதை லாகவமாக கேட்ச் செய்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். எனினும் அடுத்த பந்தில் 4 ரன்களை வழங்கினாலும், அடுத்தடுத்த பந்துகளில் ஒவ்வொரு ரன்களை வழங்கினார். என்றாலும் 5 பந்தில் மீண்டும் ஒரு விக்கெட்டை (ரபாடா) எடுத்து இந்தியாவுக்கு மீண்டும் ஒரு கப்பை வாங்கிக் கொடுத்தார், ஹர்திக். இதன்மூலம் 2007 தோனி தலைமைக்குப் பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி உச்சி முகர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியைத் தாங்காத இந்திய அணி, ஆனந்தக் கண்ணீரில் நனைந்தனர். கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா எனப் பலரும் கண்ணீர்விட்டு அழுதது மைதானத்தையே கலங்கவைத்தது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, பேட்டியளித்த அவர், “இதுவே தமது டி20 கடைசி உலகக்கோப்பை” என்றார்.

இதையும் படிக்க: T20WC Final |”இந்த ஃபைனலிலும் தோற்றால் பார்படாஸ் பெருங்கடலில் ரோகித் குதித்துவிடுவார்” - கங்குலி

இந்தியா
INDvSA | டி20 உலகக் கோப்பை சாம்பியன் யார்... தென்னாப்பிரிக்காவோடு பலப்பரிட்சை நடத்தும் இந்தியா..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com