ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாTwitter

T20 WC 2024 | ரோகித், கோலி ஓய்வு.. “இருவரையும் மிஸ் செய்வோம்” - ஹர்திக் பாண்டியா

“எதிர்காலத்தின் ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் மிஸ் செய்வோம்” என இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
Published on

2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் வென்றது உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இந்தக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமான இருந்தவர்களின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். இக்கட்டான நேரத்தில் அவர் வீசிய நேர்த்தியான பந்துவீச்சும், எடுக்கப்பட்ட விக்கெட்டுமே இந்திய அணிக்கு மீண்டும் கோப்பையை உறுதி செய்தது. இதையடுத்து, அவரைப் பற்றிய பேச்சுகளும் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், உலகக்கோப்பைக்குப் பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா, “எதிர்காலத்தின் ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவரையும் மிஸ் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “உலகக்கோப்பையை வென்றது மிகச்சிறந்த உணர்வை கொடுக்கிறது. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் எனது கைகளில் ஆட்டம் வந்து நின்றது. இந்திய அணியின் நம்பிக்கையை காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிக்க: 'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

ஹர்திக் பாண்டியா
கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

நான் எப்போதும் கடவுளை நம்புவேன். கடந்த சில மாதங்களாக ஏராளமான விஷயங்கள் என்னைப் பற்றி கூறப்பட்டு வந்தன. என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட அதிகமாக பேசினார்கள். அனைத்துக்கும் அமைதியாகவே இருந்தேன். எனது வாழ்க்கை, ஒரு கட்டத்தில் அவர்களுக்கான பதிலடியாக இருக்கும் என்று நம்பினேன். அது தற்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்காகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களாக இருக்கும் அவர்கள், இந்த வெற்றிக்கும் கொண்டாட்டத்திற்கும் தகுதியானவர்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இருவருடன் தொடர்ந்து பயணித்து விளையாடி வருவது அற்புதமான அனுபவம். நிச்சயம், எதிர்காலத்தில் அவர்கள் இருவரையும் மிஸ் செய்வோம். ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் எங்களால் சிறந்த ஃபேர்வெல்லை கொடுக்க முடிந்துள்ளது.

ராகுல் டிராவிட் ஓர் அற்புதமான மனிதர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு இப்படி ஒரு பிரியாவிடை கொடுப்பது அற்புதம். அவருடன் மிகவும் நல்ல உறவைக் கொண்டிருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாலத்தீவு | அதிபருக்கு சூன்யம் வைத்ததாக 2 அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணை தீவிரம்!

ஹர்திக் பாண்டியா
விராட், ரோகித் இரு ஜாம்பவான்கள் ஓய்வு.. வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடிய ட்ராவிட்.. என்ன நடந்தது நேற்று?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com