“என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது” - உலகககோப்பையை வென்ற இந்திய அணிக்கு தோனி வாழ்த்து

டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, வாழ்த்து மழையில் நனைந்து வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எம்.எஸ் தோனி, கோப்பை வென்ற இந்திய வீரர்கள்
எம்.எஸ் தோனி, கோப்பை வென்ற இந்திய வீரர்கள்pt web

வரலாற்று சிறப்புமிக்க போட்டி- பிரதமர் மோடி

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணி கடினமான சூழ்நிலைகளிலும் உறுதியான மனப்பான்மையுடன் பயணம் செய்து, தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடியதாக குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வெற்றி அசாதாரணமானது என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியால் நாம் பெருமை கொள்கிறோம் என்றும், இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது எனவும் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி file image

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், அற்புதமான வெற்றி மற்றும் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். ரோகித் சர்மாவின் தலைமை பண்பையும், சூர்யகுமாரின் கேட்ச்சையும் அவர் பாராட்டியுள்ளார்.

எம்.எஸ் தோனி, கோப்பை வென்ற இந்திய வீரர்கள்
விராட், ரோகித் இரு ஜாம்பவான்கள் ஓய்வு... ஆக்ரோஷமாக கொண்டாடிய ட்ராவிட்.. என்ன நடந்தது நேற்று?

இதயத்துடிப்பு எகிறிவிட்டது - தோனி

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணி முறியடிக்க முடியாத சாதனையுடன் போட்டியை முடித்திருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

 உலகக் கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டு வந்ததற்கு மிகப் பெரிய நன்றி - தோனி 

 Dhoni |  T20WorldCupFinal |  INDIA
உலகக் கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டு வந்ததற்கு மிகப் பெரிய நன்றி - தோனி Dhoni | T20WorldCupFinal | INDIA

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வெளியிட்டுள்ள பதிவில், என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது, ஆனால் இந்திய வீரர்கள் நிதானமாக, தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர் என பாராட்டு தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டுவருவதற்காக உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அதேபோல் தனக்கு விலைமதிப்பில்லாத பிறந்தநாள் பரிசை அளிப்பதற்காக நன்றியை கூறிக்கொள்வதாகவும் தோனி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு ட்ரெண்டாகி வருகிறது.

எம்.எஸ் தோனி, கோப்பை வென்ற இந்திய வீரர்கள்
கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணியின் ஜெர்சியில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு நட்சத்திரமும், நம் நாட்டின் நட்சத்திரக் கண்களை கொண்ட குழந்தைகளை, அவர்களின் கனவுகளுக்கு ஒருபடி மேலே செல்ல தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அப்படி இந்தியா 4வது நட்சத்திரத்தை பெற்றுள்ளதாகவும் அவர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், விவிஎஸ் லக்ஸ்மண் உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், அமிதாப் பச்சன், அல்லு அர்ஜூன், பிரபுதேவா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இந்திய அணிக்கு வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

எம்.எஸ் தோனி, கோப்பை வென்ற இந்திய வீரர்கள்
‘இதுதான் எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி’ - உலகக்கோப்பை வென்ற கையுடன் ஓய்வை அறிவித்தார் கோலி!

பிரதமர் மோடி தொலைபேசி மூலமாகவும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com