DC
DCpt desk

தத்தளித்த டெல்லி.. காப்பானாக மாறி மீட்டுவந்த அஷுதோஷ்! மழையால் தொடரிலிருந்தே வெளியேறிய SRH!

அவ்வளவுதான் சோலி முடிந்தது என்ற நிலைமைக்கே டெல்லி அணி செல்ல, எப்போதும் போல காப்பானாக வந்த அஷுதோஷ் சர்மா அணியை இக்கட்டான நிலைமையிலிருந்து மீட்டு எடுத்துவந்தார்.
Published on

ஒவ்வொரு போட்டியும் அதிக கவனம் பெற்றுவருகின்றன:

2025 ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கிட்டத்தட்ட இறுதி 3 சுற்றுப்போட்டிகளே மீதமுள்ள நிலையில், இன்னும் ஒரு அணிகூட பிளே ஆஃப் கதவை உடைக்கவில்லை. புள்ளிப்பட்டியலில் பின்தங்கியிருக்கும் லக்னோ, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதால், ஒவ்வொரு போட்டியும் அதிக கவனம் பெற்றுவருகின்றன.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது:

இந்த சூழலில் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலிருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியும், 9வது இடத்தில் இருக்கும் SRH அணியும் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து மொத்தமாக சரிந்தது.

DC
அரசுக் கட்டடங்களுக்கு பசுக்களின் சாணம் வண்ணமாகிறது? உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன விஷயம்!

29 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி:

அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ், கருண் நாயரை 0 ரன்னிலும், டூபிளெஸியை 3 மற்றும் அபிஷேக் போரலை 8 ரன்னிலும் வரிசையாக வெளியேற்றி அடிக்கு மேல் அடி கொடுத்தார். தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் 10 ரன்னிலும், அக்சர் பட்டேல் 6 ரன்னிலும் வந்தவேகத்தில் பெவிலியன் திரும்ப, 29 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி சுக்கு நூறாக நொருங்கியது.

காப்பானாக வந்த அஷுதோஷ் சர்மா:

’என்ன பா நடக்குது இங்க’ என டெல்லி ரசிகர்கள் தலைமேல் கைவைக்க, சிக்சர் பவுண்டரி என விரட்டி இண்டண்ட் காமித்த விப்ராஜ் நிகமும் 18 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவ்வளவுதான் சோலி முடிந்தது என்ற நிலைமைக்கே டெல்லி அணி செல்ல, எப்போதும் போல காப்பானாக வந்த அஷுதோஷ் சர்மா அணியை இக்கட்டான நிலைமையிலிருந்து மீட்டு எடுத்துவந்தார்.

DC
மதுரை | விஜயைப் பார்க்க வந்த தவெக தொண்டர்.. பாதுகாவலரின் அதிர்ச்சி செயல்!

41 ரன்கள் அடித்த அஷுதோஷ் சர்மா:

முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தது முதல், எப்போதெல்லாம் டெல்லி அணி படுகுழிக்குள் தள்ளப்படுகிறதோ அப்போதெல்லாம் ரட்சகனாக மாறி காப்பாற்றிவரும் அஷுதோஷ் சர்மா, இந்த போட்டியிலும் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தார். ஒருபக்கம் நங்கூரம் போட்டு நிலைத்துநின்ற ஸ்டப்ஸ் 36 பந்தில் 41 ரன்கள் அடிக்க, அதிரடி காட்டிய அஷுதோஷ் சர்மா 41 ரன்கள் அடித்து டெல்லியை 133 ரன்கள் என்ற கௌரவமான டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

DC
“பாஸ்போர்ட்டை ஒப்படையுங்கள்” - பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

SRH அணிக்கு வில்லனாக மாறிய மழை:

134 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாட SRH அணி காத்திருந்த நிலையில், மைதானத்தில் மழை பெய்ய ஆட்டம் தொடங்காமல் பாதியில் நிறுத்தப்பட்டது. மழை நிற்கும் வெற்றியை பெற்று playoff செல்வதற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம் என காத்திருந்த SRH அணிக்கு மழை வில்லனாக மாறியது.. தொடர்ந்து மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிக்கும் தலா 1 புள்ளி என பிரித்து வழங்கப்பட்ட நிலையில், playoff செல்வதற்கான வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ் அணி.

சென்னை, ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து 3வது அணியாக 2025 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது ஹைதராபாத் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com