முதல்வர் யோகி ஆதித்யநாத்web
இந்தியா
அரசுக் கட்டடங்களுக்கு பசுக்களின் சாணம் வண்ணமாகிறது? உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன விஷயம்!
அரசு கட்டடங்களுக்கு பசு சாணத்தையே பூசுங்கள் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுக் கட்டடங்களுக்கு பசுக்களின் சாணத்தையே வண்ணமாக பூசுமாறு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார்.
மாட்டு சாணத்தையே பூசுங்கள்..
லக்னோவில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய யோகி, பசுக்களைப் பராமரிக்க, உள்நாட்டு இனங்களுக்கான போட்டிகளை நடத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
யோகி ஆதித்யநாத்pt web
மேலும், பசுக்களின் சாணத்தை அரசுக் கட்டடங்களுக்கு வண்ணமாக பூசுவது குறித்த திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.