சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

ரோகித் சர்மாவை, ஆகாஷ் அம்பானி தன்னுடைய காரில் அழைத்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகாஷ் அம்பானி உடன் செல்லும் ரோகித் சர்மா
ஆகாஷ் அம்பானி உடன் செல்லும் ரோகித் சர்மாட்விட்டர்

10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, நடப்பு ஆண்டிலும் களைகட்டி வருகிறது. இதில், 5 ஐபிஎல் கோப்பைகளைப் பெற்ற மும்பை அணி அதிக தள்ளாட்டத்தைச் சந்தித்து வருகிறது. தாம் இதுவரை சந்தித்த 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இதன் பின்னணியில் ‘மும்பை அணி நிர்வாகம் கடந்த ஆண்டுவரை கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை தலைமை ஏற்க வைத்ததுதான் தொடர் தோல்விக்கு காரணம்’ என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்குத் தகுந்தாற்போல் மும்பை ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ‘ரோகித்... ரோகித்’ என மைதானத்திலேயே குரல் கொடுத்து அவரை வெறுப்பேற்றுகின்றனர்.

ஆகாஷ் அம்பானி உடன் செல்லும் ரோகித் சர்மா
“மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்..”! ஹர்திக் பாண்டியாவை Booed செய்த ரசிகர்களை எச்சரித்த மஞ்ச்ரேக்கர்!

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று (ஏப்ரல் 11) 25வது லீக் போட்டியில், வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சந்திக்கிறது.

ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மாட்விட்டர்

இதற்கிடையே நடப்பு சீசனில், வெறும் ஒரு பேட்டராக மட்டும் தனது பணியைத் தொடர்ந்து வரும் ரோகித் சர்மா, அடுத்த சீசனில் மரியாதை தரும் அணிக்கு மாறிவிடுவார் எனப் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் அவரை அணிக்குள் இழுக்கும் வேலைகளும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் அவரை இழுக்க போட்டிபோடுவதாக நாள்தோறும் தகவல் கசிந்தவண்ணம் உள்ளது.

இதையும் படிக்க: ”மெட்ரோவிடம் பெற்ற ரூ.3,300 கோடியை திருப்பிக் கொடுங்கள்”-அனில் அம்பானிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்

ஆகாஷ் அம்பானி உடன் செல்லும் ரோகித் சர்மா
"இது நடந்திருந்தா ரோகித்தின் MI கேப்டன்ஷிப்பை தூக்கி இருக்க மாட்டாங்க" - சித்து சொன்ன முக்கிய காரணம்

இதற்கிடையே ரோகித் சர்மாவை, ஆகாஷ் அம்பானி தன்னுடைய காரில் அழைத்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷ் அம்பானி காரை ஓட்ட, அவருக்குப் பக்கத்து முன் இருக்கையில் ரோகித் சர்மா, அமைதியாய் உட்கார்ந்திருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரோகித்துடன் சமாதானம் பேசவே ஆகாஷ் அம்பானி அவருடன் ஒரே காரில் பயணித்து இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. ஆனால், ரோகித் சர்மா ரசிகர்களோ, நடப்புத் தொடரிலேயே மீண்டும் ரோகித்துக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படலாம் எனக் கூறி வருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இருப்பவர், முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இவர்களுடைய மூத்த மகன்தான் ஆகாஷ் அம்பானி. முன்னதாக, ரோகித் தலைமையிலான மும்பை அணி, 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வாங்கிக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நேற்று ED..இன்று CBI.! திகார் சிறையில் கவிதா மீண்டும் கைது; காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டம்!

ஆகாஷ் அம்பானி உடன் செல்லும் ரோகித் சர்மா
"மரியாதையாக நடத்தும் வேறுஅணிக்கு ரோகித் சர்மா செல்வார்" - 2025 ஐபிஎல் வர்த்தகத்தை உறுதிசெய்த ராயுடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com