“மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்..”! ஹர்திக் பாண்டியாவை Booed செய்த ரசிகர்களை எச்சரித்த மஞ்ச்ரேக்கர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
manjrekar - hardik
manjrekar - hardikX

2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து “ரோகித் சர்மா vs மும்பை இந்தியன்ஸ் vs ஹர்திக் பாண்டியா” என்ற மூன்று பெயர்கள் தான் பெருமளவில் தலைப்புச் செய்திகளில் இருந்துவருகிறது. 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதிலிருந்து தான் ”ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா” இரண்டு பெயர்களுக்கும் இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியது, ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் மற்றும் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது என பல விசயங்களால் ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தியுடன் இருக்கும் ரசிகர்கள், ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சத்தமிட்டு வருகின்றனர்.

hardik
hardik

அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா எங்கு சென்றாலும் "boo" என சத்தமிட்ட ரசிகர்கள், ஒருபடிக்கு மேலே சென்று மைதானத்தில் நாய் ஒன்று புகுந்த போதும் “ஹர்திக் ஹர்திக்” என சத்தமிட்டு வெறுப்பை வெளிப்படுத்தினர். ஹைத்ராபாத் மைதானத்திலும் ஹர்திக் பாண்டியா ”Booed” செய்யப்பட்டார்.

manjrekar - hardik
”ரோகித் + பும்ரா” இருவரும் MI விட்டு வெளியேறுவார்கள்! CSK or RCB-க்கு செல்ல வாய்ப்பு? முக்கிய தகவல்!

மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்.. எச்சரித்த மஞ்ச்ரேக்கர்!

இந்நிலையில் மும்பை அணியின் ஹோம் கிரவுண்டான வான்கடே மைதானத்தில் இன்று போட்டி தொடங்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் போடுவதற்கு மைதானத்திற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வரவேற்றார். அப்போது ஹர்திக் பாண்டியா பெயரை மஞ்ச்ரேக்கர் சொன்னதும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “Boooo" என சத்தமிட ஆரம்பித்தனர். அப்போது பேசிய மஞ்ச்ரேக்கர் “மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்” என்று ரசிகர்களை எச்சரிக்கை செய்தார்.

முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, டிரெண்ட் போல்ட்டின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர் முடிவில் 125 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ரோகித் சர்மா உள்ளிட்ட மூன்று வீரர்கள் கோல்டன் டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

manjrekar - hardik
குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com