"இது நடந்திருந்தா ரோகித்தின் MI கேப்டன்ஷிப்பை தூக்கி இருக்க மாட்டாங்க" - சித்து சொன்ன முக்கிய காரணம்

”இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தங்களுடைய கேப்டனாக இல்லாததை ஜீரணிக்க முடியாமலேயே மும்பை ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா, நவ்ஜோத் சிங் சித்து
ஹர்திக் பாண்டியா, நவ்ஜோத் சிங் சித்துட்விட்டர்

10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, நடப்பு ஆண்டிலும் களைகட்டி வருகிறது. பழைய சாதனைகள் தகர்க்கப்பட்டு ஏதாவது ஒரு புதிய சாதனை படைக்கப்படுவதால் ரசிகர்கள் தினந்தோறும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். அதேநேரத்தில், 5 ஐபிஎல் கோப்பைகளைப் பெற்ற மும்பை அணி, நடப்புத் தொடரில் அதிக தள்ளாட்டத்தைச் சந்தித்து வருகிறது. தாம் இதுவரை சந்தித்த 3 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் நீடிக்கிறது. அந்த அணி நிர்வாகம் கடந்த ஆண்டுவரை கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தற்போது ஹர்திக் பாண்டியாவை தலைமை ஏற்க வைத்திருப்பதுதான் தோல்விக்குக் காரணம் எனப் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மாட்விட்டர்

மும்பை ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவே ‘ரோகித்... ரோகித்’ எனக் குரல் கொடுக்கின்றனர். மேலும் கடந்த போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் செயல்பாடு சரியில்லை என விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் இவருடைய தலைமையிலான அணியே, அதிக ரன்களை வழங்கி சாதனை படைத்திருக்கிறது. மேலும் அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லையில் நிறுத்தி ஃபீல்டிங் செய்யவைத்தது, ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சைச் சரியான இடத்தில் பயன்படுத்தத் தவறியது என ஹர்திக் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

ஹர்திக் பாண்டியா, நவ்ஜோத் சிங் சித்து
குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

இந்த நிலையில், ”இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தங்களுடைய கேப்டனாக இல்லாததை ஜீரணிக்க முடியாமலேயே மும்பை ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்தியாவுக்கே கேப்டனாக இருக்கும் ஒருவர், எப்படி ஒரு லீக் அணியின் கேப்டனாக இல்லை என்ற விஷயம் யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. அவர் அப்படி என்னதான் தவறு செய்தார்? இதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரசிகர்கள் கோபமாக இருக்கக் காரணமாக இருக்கலாம். வெற்றிதான் அனைத்துக்குமே பதிலாக இருக்கும். தற்போது மும்பை அணி தொடர்ந்து கடந்த போட்டிகளில் வென்று இருந்தால் இந்தச் சத்தமே ஏற்பட்டிருக்காது.

’இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாதான் டி20 உலகக் கோப்பையில் செயல்படப் போகிறார்’ என பிசிசிஐ அக்டோபர் மாதமே அறிவித்திருந்தால், ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவை அந்த அணி நிர்வாகம் எடுத்திருக்காது. ஏனென்றால், இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ஒருவரை எப்படி ஒரு லீக் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தூக்குவது என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நிச்சயம் யோசித்திருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்திருக்கும் இந்த முடிவு மிகவும் தவறானது” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: அமேதி To வயநாடு: பாஜகவைக் கண்டு பயமா? விமர்சிக்கும் கேரள சிபிஎம்; ராகுல் காந்தி தொகுதி மாறியது ஏன்?

ஹர்திக் பாண்டியா, நவ்ஜோத் சிங் சித்து
”களம் 8-ல் மும்பை அணியை பொளந்துகட்டிய SRH"-மோசமான கேப்டன்சி..ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com