RCB vs RR Eliminator - இரு அணிகளுக்கும் நடந்த தலைகீழ் மாற்றங்கள்... என்னதான் ஆகப்போகிறது போட்டியில்?

நெடும் போராட்டத்திற்குப் பிறகு ப்ளே ஆஃப் வந்துள்ளது பெங்களூரு. மறுபுறம் தொடர் தோல்விகளால், ஒரு வெற்றி... அதும் பெரிய வெற்றிக்கு காத்திருக்கும் ராஜஸ்தான்... இரு அணிகளும் மோதும் எலிமினேட்டர் போட்டி நாளை நடக்கிறது.
rcb vs rr
rcb vs rrpt web

RR vs RCB Eliminator

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இன்னும் 4 போட்டிகளில் கோப்பை யாருக்கு என்பது தெரிந்துவிடும். இதுஒருபுறம் இருந்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிதான் நமது பல்ஸை எகிறவைக்கும்.

நெடும்போராட்டத்திற்குப் பிறகு ப்ளே ஆஃப் வந்துள்ளது பெங்களூரு. மறுபுறம் தொடர் தோல்விகளால், ஒரு வெற்றி அதும் பெரிய வெற்றிக்கு காத்திருக்கும் ராஜஸ்தான். இருபுறமும் வலுவான வீரர்கள் என வலுவான அணியாகவே இருக்கின்றன. ஆனால் வெற்றி என்பது யாருக்கு வசப்பட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே ஏப்ரல் 6-ஆம் தேதி இரு அணிகளும் மோதி இருந்தன. அதற்கு முன் ஆர்சிபி, தான் விளையாடி இருந்த 4 போட்டிகளில் 3-ல் தோல்வி அடைந்திருந்தது. ராஜஸ்தான், தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4-ஆவது போட்டியில் பெங்களூருவைச் சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூரு விராட் கோலியின் அதிரடியான சதத்தால் 183 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களிலேயே 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் பட்லர் 58 பந்துகளில் சதமடித்து அசத்த, அவருக்கு இணையாக ஆடிய சாம்சனும் 69 ரன்களை குவித்திருந்தார். இது, ராஜஸ்தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

rcb vs rr
“CSK இல்லைன்னா என்ன, தமிழர்கள் இருக்காங்க..” - Playoff-ன் 4 அணிகளிலும் தமிழக வீரர்கள்.. ஒரு பார்வை!

தலைகீழ் மாற்றங்கள்

ஆனால் தொடரின் ஆரம்பத்தில் இருந்த இரு அணிகளும் தொடரின் பிற்பாதியில் தலைகீழான மாற்றங்களுக்கு உள்ளானது. ராஜஸ்தான் அணி முதலில், தான் விளையாடிய 9 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தது. ஆனால் அடுத்து விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வி அடைந்திருந்தது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றதா என எண்ண வேண்டாம். கொல்கத்தா உடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

பெங்களூரு அணியோ தான் விளையாடிய முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால் அடுத்து விளையாடிய 6 போட்டிகளில் அனைத்திலும் வென்று, யாராக இருந்தாலும் சம்பவம்தான் என எதிரணிக்கு பயம் காட்டி வருகிறது. இத்தகைய சூழலில்தான் இரு அணிகளும் எலிமினேட்டர் சுற்றில் சந்திக்கின்றன.

rcb vs rr
“டெஸ்ட்டிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணம்” - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய தோனி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் அந்த அணி பேட்டிங்கிற்கு விராட் கோலியை மட்டுமே நம்பி இருந்தது. இன்னிங்ஸின் இறுதிக்கட்டதில் தினேஷ் கார்த்திக் சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி பெங்களூருவிற்காக ரன்களைச் சேர்த்தார். ஆனால் தற்போது ரஜத் படிதார் தனது பார்மிற்கு திரும்பியது மிடில் ஆர்டரில், பெங்களூரு அணியின் மிகப்பெரிய தலைவலியை சரிசெய்துள்ளது.

தொடரின் இரண்டாம் பாதியில், அவர் களமிறங்கினாலே 50 ரன்கள் நிச்சயம் எனும் அளவிற்கு ஆடி வருகிறார் ரஜத் படிதார். விராட் தொடக்கத்தில் ரன்களைச் சேர்க்க... பின்வரும் ரஜத் படிதார் தனது அதிரடியோடு மிடில் ஓவர்களில் ரன்களை சேர்த்து தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்தால் நிச்சயமாக 200 ரன்களை தாண்டி விடுகிறது பெங்களூரு அணி.

இதில் க்ரீன் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும், தற்போது அணியில் மேக்ஸ்வெல் இணைந்திருப்பதும் பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம்.

rcb
rcbcricinfo

அணியின் மிகப்பெரிய பிரச்னை பந்துவீச்சாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், பந்துவீச்சும் தலைகீழான மாற்றங்களைக் கண்டுள்ளது. தொடரின் இரண்டாம் பாதியில், ஹைதராபாத் அணியுடனான போட்டிக்குப் பிறகே பந்துவீச்சாளர்கள் சிரமேற்கொண்டு தங்களது பணியை மேற்கொண்டனர்.

அதிலும் குஜராத், பஞ்சாப், டெல்லி உடனான போட்டிகளின்போது எதிரணியை ஆல் அவுட் செய்து அசத்தினர். குறிப்பாக யஷ் தயாள் மற்றும் முகமது சிராஜ் பந்துவீச்சை சொல்லியாக வேண்டும்.

சென்னை உடனான போட்டியின்போது கூட பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களால் மட்டுமே வென்றது. இப்படி பெங்களூரு அணி ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றங்களைக் கண்டுள்ளது. தொடரின் ஆரம்பக்கட்டத்தில் சரியாக அமையாத விஷயங்கள் அனைத்தும் இரண்டாம் பாதியில் பெங்களூரு அணிக்கு சாதகமாக மிகச் சிறப்பாகவே அமைந்தன.

rcb vs rr
MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!

ராஜஸ்தான் ராயல்ஸ்

தொடரின் ஆரம்பக்கட்டத்தில் ராஜஸ்தான் அணி ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால், தொடரையே நடத்தாமல் கோப்பையை கொடுத்துவிடலாமா என்றெல்லாம்கூட எண்ணி இருப்பர். ஏனென்றால் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு கொண்ட அணியாக இருந்தது.

நடப்பு தொடரில் அனைத்து அணிகளும் 220 ரன்களை அசால்ட்டாக அடிக்க ராஜஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் அனைத்து அணிகளும் திணறின. ஏனெனில், அந்த அணி விளையாடிய முதல் 9 போட்டிகளில், எதிரணியில் கொல்கத்தா மட்டுமே 200 ரன்களைக் கடந்து 223 ரன்களை எடுத்தது. அந்த போட்டியிலும்கூட ராஜஸ்தான் வென்றது வேறு கதை. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் முதலில் பேட் செய்த எதிரணிகள் ஏதும் 200 ரன்களை தாண்டவில்லை. ஏனென்றால் பந்துவீச்சு அத்தனை பலம் கொண்டதாக இருந்தது.

பேட்டிங்கிலும் வலுவான ஓர் அணியாகத்தான் அந்த அணி உள்ளது. ஜாஸ் பட்லர் உலகக்கோப்பை பயிற்சிக்காக தனது நாட்டிற்கு திரும்பியது மட்டுமே ராஜஸ்தான் அணியின் தொடக்கத்திற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பட்லர் 11 போட்டிகளில் விளையாடி 359 ரன்களை குவித்திருந்தார். ராஜஸ்தான் பெற்ற வெற்றிகளிலெல்லாம் முக்கியக் காரணியாக இருந்தார்.

rcb vs rr
”இதுக்கே இந்த ஆட்டமா..” தோனியையும் CSKவையும் விமர்சிக்கும் RCB ரசிகர்கள்!

ராஜஸ்தானுக்கு எங்கு சிக்கல்

அடுத்தது நடப்பு தொடரில் ரியான் பராங்கின் மாபெரும் எழுச்சி, மிடில் ஆர்டிரில் அவரது பங்களிப்பு ராஜஸ்தான் அணிக்கு மிகுந்த பக்கபலமாக உள்ளது. ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ரன்னை அடித்த பேட்டராக ரியான் பராங் உள்ளார். இதுவரை 4 அரைசதத்துடன் 531 ரன்களை எடுத்துள்ளார். அதேசமயத்தில் சஞ்சு சாம்சனின் சீரான ஆட்டத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கடந்த சீசன்களில் consistencyக்கு சிரமப்பட்ட சஞ்சு சாம்சன் நடப்புத் தொடரின் முதல் பாதியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆரஞ்ச் தொப்பிக்கான போட்டியிலும் முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி 4 போட்டிகளில் மிகுந்த சிரமத்துடனே விளையாடி வருகிறார் சாம்சன். கடந்த 4 போட்டிகளில் 119 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

sanju samson
sanju samson

ராஜஸ்தான் அணிக்கு எங்கு சிக்கல் என்றால், ஜெய்ஸ்வால் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பாதது. கடந்த சீசனில் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களை அடித்து 625 ரன்களை எடுத்து அதிரடியில் மிரட்டிய அவர், தற்போதைய சீசனில் 13 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் மட்டுமே அடித்து 348 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

தொடரின் முதல்பாதியில் எதிரணியை மிரளவைத்த சாஹல் நடுவே சில போட்டிகளில் திணறியது குறிப்பிடத்தக்கது. சென்னை, பஞ்சாப் போட்டிகளுக்குப் பின் மீண்டு வருவது ராஜஸ்தான் அணிக்கு சற்றே ஆறுதல்.

அதோடு, தொடரின் முதல் பாதியில் டெத் ஓவர்களில் அசத்திய ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களும், சிலபோட்டிகளில் திணறினர். இப்படி ராஜஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பிரிவும் தலைகீழ் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

rcb vs rr
எக்ஸ் தளம் மீது கோபமா.. இன்ஸ்டாவை அதிகம் விரும்புவது ஏன்? தோனி சொன்ன ருசிகர பதில்!

நேருக்கு நேர்

முழுக்க முழுக்க பாசிட்டிவ்களோடு களமிறங்கும் பெங்களூரு அணியும், தோல்விகளால் துவண்டிருக்கும் ராஜஸ்தான் அணியும் எலிமினேட்டர் சுற்றில் களமிறங்குகின்றன. ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. 15 போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது,.

எலிமினேட்டர் சுற்றில் இதுவரை 3 முறை விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி இதுவரை 1 முறை மட்டுமே வென்றுள்ளது. பெங்களூரு அணியோ 4 முறை விளையாடி அதில் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

rr vs rcb
rr vs rcbpt web

போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தில் இரு அணிகளும் 60% வெற்றியை பதிவு செய்துள்ளன. போட்டி நடக்கும் அஹமதாபாத்தில் ராஜஸ்தான் அணியே அதிக போட்டிகளில் விளையாடியுள்ளது. 15 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு அணியோ 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ளது. அஹமதாபாத்தில் இரு அணிகளும் நேருக்கு நேராக 2 முறை மோதியுள்ளன. இதில் தலா ஒரு போட்டியில் இரு அணிகளும் வென்றுள்ளன.

rcb vs rr
ஐபிஎல் 2024 - பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த ஆர்சிபியின் கதை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com