“டெஸ்ட்டிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணம்” - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய தோனி!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெற்றது ஏன் என்பது குறித்து சென்னை அணி வீரர் தோனி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
தோனி
தோனிட்விட்டர்

சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி இருந்தாலும், அவ்வணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தல தோனியின் பற்றி செய்திகளே தினந்தோறும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அவர் இந்த ஆண்டுடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறாரா என்பது பற்றிய செய்திகள்தான் இணையதளங்களை நிரப்பிவருகின்றன.

தோனி
தோனிட்விட்டர்

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெற்றது ஏன் என ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் தோனி. அதில், “இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது, குடும்பத்தினருடன் நேரம் செலவிட வாய்ப்பே கிடைக்காது. 2015ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடினேன். அதனால் சொந்த ஊரில் நான் இருப்பதே அரிதாக மாறியது.

இதையும் படிக்க: ஈரான் அதிபர் மரணம்: விபத்தா.. சதியா? மொசாட்டிற்கு தொடர்பு? பின்னணியில் பகீர் கிளப்பும் புதியதகவல்கள்

தோனி
CSK Vs RCB| கை கொடுக்க காத்திருந்த தோனி.. கண்டுகொள்ளாத RCB வீரர்கள்.. தேடிச் சென்ற விராட் கோலி!

ஒவ்வொரு கிரிக்கெட் தொடருக்கும் இடையில் 5-6 நாட்கள்தான் இடைவெளி இருக்கும். அப்போதும்கூட, சில அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இருக்கும். அதேபோல் வேறு மைதானங்களுக்கு பயணிக்க வேண்டிய நிலை வரும். அதனால் சொந்த ஊரான ராஞ்சியில் 2 நாட்கள் தங்குவதே பெரிய விஷயமாகியது. அந்த 2 நாட்களில்தான் அனைத்துச் சொந்த விஷயங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

M.S.Dhoni
M.S.Dhoni@csktwitter

ஆனால் 2015ஆம் ஆண்டுக்குப் பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால், பெற்றோருக்கு வயதாகிக்கொண்டே போவதை உணர்ந்தேன். அதேபோல் மனைவியுடன் நேரம் செலவிட முடியாத நிலை இருந்தது. குழந்தையும் வளர்வதை அறிந்தேன். அதனால் 2014 இறுதியிலேயே ஓய்வை அறிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எக்ஸ் தளம் மீது கோபமா.. இன்ஸ்டாவை அதிகம் விரும்புவது ஏன்? தோனி சொன்ன ருசிகர பதில்!

தோனி
”இதுக்கே இந்த ஆட்டமா..” தோனியையும் CSKவையும் விமர்சிக்கும் RCB ரசிகர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com