ஐபிஎல் 2024 - பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த ஆர்சிபியின் கதை

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளில் சிக்கித் தவித்த பெங்களூரு அணி, இரண்டாம் பாதியில் பெரும்பாலும் அனைத்துபோட்டிகளிலும் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
rcb
rcbpt web

விராட் மட்டுமே ஆதரவு

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன் ஆர்சிபி வீரர்களிடம், நீங்கள் ப்ளே ஆஃப் போட்டியில் விளையாடுவீர்கள் என சொல்லி இருந்தால், அவர்களே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ அசத்தலாக ஆடி, தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று, அதிலும் குறிப்பாக ஐந்துமுறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்த அணி, மொத்தமாக மீண்டு வந்து, அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ப்ளே ஆஃப்க்குள் சென்றிருப்பது நிச்சயாமாக Motivation storyதான். தொடரின் முதல்பாதியில் பேட்டிங்கில் விராட் கோலி மட்டும்தான் புல் ஃபார்மில் இருந்தார். அதேபோல ஒவ்வொரு இன்னிங்ஸின் இறுதிக்கட்டத்திலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். மற்ற வீரர்கள் சில நேரங்களில் மட்டும்தான் ஆட்டத்திற்கு கைகொடுத்தனர். மற்றபடி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பவே செய்தனர்.

rcb
'Definitely Not..?' |ஓய்வு குறித்து சஸ்பென்ஸ் வைத்துச் சென்ற தோனி.. CSK நிர்வாகிகளிடம் சொன்னது என்ன?

சொதப்பிய பந்துவீச்சு

தொடரின் முதல்பாதியில் பேட்டிங்கைபோலவே பெங்களூரு அணியின் பந்துவீச்சும் சுத்தமாக எடுபடவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும்தான் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட்களை வீழ்த்தினர். மற்ற போட்டிகளில் எல்லாம், ‘எதிரணியினர் வெற்றி பெற யாராவது பந்துவீச வேண்டுமே’ என்பது போலத்தான் பெங்களூரு அணியின் பந்துவீச்சு செயல்பாடுகள் இருந்தன.

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், 183 ரன்கள் எனும் இலக்கை 17 ஓவர்களிலேயே எட்டவிட்டனர் பெங்களூரு பந்துவீச்சாளர்கள். அதுமட்டுமின்றி அப்போட்டியில் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்தனர். இதுகூட பரவாயில்லை...

மும்பையுடனான போட்டி இன்னும் மோசம். 197 ரன்கள் எனும் இலக்கை 16 ஆவது ஓவரிலேயே கடந்து வெற்றி பெற்றனர் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள். அந்த போட்டியிலும் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினர். இப்படித்தான் ஆர்சிபியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் தொடரின் முதல்பாதியில் படுமோசமாக இருந்தது.

rcb
“இதெல்லாம் சரியில்லங்க..” காத்திருக்க வைத்த RCB வீரர்கள்.. வெளியேறிய தோனி.. விமர்சகர்கள் சொல்வதென்ன?

இரண்டாம் பாதியில் மாறிய நிலை

ஆனால், தொடரின் இரண்டாம் பாதியில், ஹைதராபாத் அணியுடனான போட்டிக்குப் பிறகே பந்துவீச்சாளர்கள் சிரமேற்கொண்டு தங்களது பணியை மேற்கொண்டனர். அதிலும் குஜராத், பஞ்சாப், டெல்லி உடனான போட்டிகளின்போது எதிரணியை ஆல் அவுட் செய்து அசத்தினர். குறிப்பாக யஷ் தயாள் மற்றும் முகமது சிராஜ்; சென்னை உடனான போட்டியின்போது கூட பெங்களூரு அணி பந்துவீச்சாளர்களால் மட்டுமே வென்றது. ஒரு பாதி சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் என்றால் மறுபாதி பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள்.

இன்னொருபுறம் தொடரின் இரண்டாம் பாதியில் பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டெழுந்ததையும் சொல்லியாக வேண்டும். ஆரம்பத்தில் சொதப்பிய ரஜத் படிதார் மும்பைக்குப் பிறகான ஆட்டங்களில் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்தார். அவர் இறங்கினால் பெங்களூரு அணிக்கு 50 ரன்கள் உறுதி எனும் நிலை ஏற்பட்டது.

அதேபோல் வில் ஜாக்ஸ் அணியில் இணைந்த பிறகும், சில போட்டிகளை கடந்த பின்பே தனது ஃபார்மிற்குத் திரும்பினார். அதிலும், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் அவர் சதம் அடித்தது ருத்ரதாண்டவம்தான். இதன்பின் யார் சொதப்பினாலும் பெங்களூரு அணிக்கு கவலை இல்லாமல் ரன்கள் மட்டும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தன. ஏனெனில் தொடரின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே விராட்டின் சீரான ஆட்டம் அணிக்கு தூணாக இருந்தது. இதைத்தாண்டித்தான் பிற வீரர்களின் செயல்பாடுகள், அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயித்தன. அந்தவகையில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தையும் சொல்லியாக வேண்டும்.

rcb
“ரெக்கார்டு செய்ய வேண்டாம்னு சொன்னதை கூடவா போடுவீங்க..” ரோகித் சர்மா வேதனை

அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்

குறிப்பாக, ஹைதராபாத் அணியுடனான 30-ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 287 ரன்களைக் குவித்துவிட, 288 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பெங்களூரு அணியில் விராட் மற்றும் டுப்ளசிஸ் மட்டுமே சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதன்காரணமாக பெங்களூரு அணி 200 ரன்களைத் தாண்டுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின் வந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 83 ரன்களை எடுத்தார். இதன் காரணமாகவே 262 ரன்களைத் தாண்டி டீசண்டாக தோற்றது பெங்களூரு. இதுபோல இன்னும் சில போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் வெளிப்பட்டன.

தொடரின் ஆரம்பக்கட்டத்தில் சரியாக அமையாத விஷயங்கள் அனைத்தும் இரண்டாம் பாதியில் பெங்களூரு அணிக்கு மிகச் சிறப்பாகவே அமைந்தன. இத்தனை பாஸிடிவ்களுக்கு மத்தியில்தான் சனிக்கிழமையன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு. இறுதி ஓவரில், சென்னை ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற 17 ரன்கள் தேவை என்ற நிலை.... யஷ் தயாள் வீசிய பந்தை 110 மீட்டர் சிக்சர் அடித்து பயம் காட்டினார் தோனி. ஆனால் அடுத்த பந்தே தோனியின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் தயாள். மீதமிருந்த 4 பந்துகளில் 1 ரன்னை மட்டுமே கொடுத்து வெற்றியை உறுதி செய்தார் தயாள். என்னதான் புது பந்து பெங்களூருவின் வெற்றிக்கு காரணம் என தினேஷ் கார்த்திக்கே சொன்னாலும், பெங்களூரு வீரர்களுக்கு உரிய வெற்றிதான் அது. தொடர்தோல்விகளால் துவண்டிருந்தாலும், நாங்கள் மீண்டு வந்தால் எங்களது ஆட்டம் எப்படி இருக்குமென உலகிற்கு காட்டி வருகின்றனர் ஆர்சிபியன்ஸ்.

rcb
சீனியரிடம் சீற்றம்.. சிக்ஸர் போனதால் பாதியில் வெளியேற்றம்? ஒரே போட்டியில் வைரலான டெண்டுல்கர் மகன்!

கோப்பை வசப்படட்டும்

ஒரு வழியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியாகி விட்டாயிற்று. மே 22 ஆம் தேதி நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற பெங்களூரு வீரர்களின் மனநிலைக்கும், தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துள்ள ராஜஸ்தான் வீரர்களின் மனநிலைக்கும் பாரதூரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நல்லதொரு கிரிக்கெட் நமக்காக காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

இதையும் சொல்லித்தானே ஆகவேண்டும்., ஆர்சிபி இதுவரை 9 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப்போட்டிவரை சென்று தோல்வி அடைந்துள்ளது. இம்முறையாவது பெங்களூரு அணிக்கு கோப்பை கைகூடுகிறதா என்று பார்க்கலாம்.

rcb
2025 IPL| ஹர்திக் பாண்டியாவிற்கு முதல் போட்டியிலேயே ஆப்பு வைத்த பிசிசிஐ.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com