உண்மையிலேயே இது கடைசிஓவர் போட்டிதானா? இழுஇழுவென இழுத்த PBKS-RR! ஒருவழியா ராஜஸ்தான் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை இறுதிஓவர் த்ரில்லராக மாற்றி கடைசியில் வென்றது ராஜஸ்தா ராயல்ஸ் அணி.
RR vs PBKS
RR vs PBKScricinfo

ஐபிஎல் வரலாற்றில் கடைசிஓவர் வரை செல்லக்கூடிய ஆட்டங்களை, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகள் முக்கியமான போட்டிகளில் வழங்கியுள்ளன. ஆனால் லீக் போட்டிகளிலேயே கடைசிபந்துவரை விறுவிறுப்பாக செல்லும் அழுத்தம் நிறைந்த போட்டிகளை, கடந்த 4 ஐபிஎல் சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளே ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிகமாக விருந்தாக படைத்துள்ளன.

கடைசி 4 ஐபிஎல் தொடர்களில் 8 போட்டிகளில் மோதியுள்ள RR மற்றும் கிங்ஸ் அணிகள், 7 ஆட்டங்களில் லோ-ஸ்கோர் மற்றும் High Pressure ஆட்டங்களை அதிகமாக வழங்கி, தனி ஐபிஎல் ரைவல்ரியை உருவாக்கிவருகின்றன.

RR vs PBKS
RR vs PBKS

அந்தவகையில் இன்றைய ஐபிஎல் போட்டியும் கடைசிஓவரின் 5வது பந்துவரை சென்று, பரபரப்பான முடிவை எட்டியது. சண்டிகரில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

RR vs PBKS
“பவுலர்களை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை; 250 ரன்கள்தான் அடிக்கவேண்டும்” - RCB கேப்டன் Faf விரக்தி!

பினிசராக வந்து கலக்கிய Ashutosh!

கேப்டன் ஷிகர் தவான் இல்லாததால் போட்டியில் சாம்கரன் அணியை வழிநடத்தினர். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, பவர்பிளேவிலேயே தயிதே மற்றும் பிரப்சிம்ரனை வெளியேற்றிய ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து RR அணியின் தரமான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய பேர்ஸ்டோ மற்றும் சாம்கரன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற 52 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி தடுமாறியது.

chahal
chahal

மோசமான நிலைக்கு பஞ்சாப் செல்ல அணியை மீட்டுஎடுத்துவரும் பொறுப்பு கடந்த போட்டிகளில் ஹீரோவாக ஜொலித்த ஷசாங் சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவருக்கும் இருந்தது. ஒருமுனையில் பொறுத்தது போதுமென அதிரடிக்கு திரும்பிய ஜிதேஷ் சர்மா 2 சிக்சர்களை பறக்கவிட, முக்கியமான நேரத்தில் ஷசாங் சிங்கை வெளியேற்றிய குல்தீப் சென் பஞ்சாப் அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தார். அதற்குபிறகு கைக்கோர்த்த ஜிதேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர்.

ashutosh sharma
ashutosh sharma

2 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு பஞ்சாப் அணியை 170 ரன்களுக்கு எடுத்துசெல்லும் முனைப்பில் இருந்த லிவிங்ஸ்டனை, தோனியை போல ஒரு ஸ்மார்ட்டான ரன் அவுட் மூலம் வெளியேற்றினார் சஞ்சு சாம்சன். உடன் ஜிதேஷ் சர்மாவும் 29 ரன்களில் வெளியேற, பஞ்சாப் அணி நிலைகுலைந்தது. ஆனால் இறுதியில் களத்திற்குவந்த பஞ்சாப் அணியின் புதிய ஃபினிசரான அசுதோஷ் சர்மா, 3 சிக்சர்களை பறக்கவிட்டு 16 பந்துகளுக்கு 31 ரன்கள் அடித்துமிரட்டிவிட 20 ஓவர் முடிவில் 147 ரன்களை எட்டியது பஞ்சாப் அணி. கடந்த மூன்று போட்டிகளிலும் கடைசிநேரத்தில் களத்திற்கு வரும் அசுதோஷ் சர்மா, 15 பந்துகளில் விரைவாகவே 30 ரன்களை எடுத்துவந்து தரமான பினிசிங்கை கொடுத்துவருகிறார்.

RR vs PBKS
“ஓய்வா.. உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்ற பசி இன்னும் இருக்கு”- 2027 WC வரை விளையாட விரும்பும் ரோகித்!

தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரபடா..

148 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி எளிதாக பெற்றுவிடும் என்று நினைத்தபோது தான், ”அவ்வளவு எளிதில் நாங்க விட்டுக்கொடுக்க மாட்டோம்” என தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் பவுலர்கள் ராஜஸ்தான் அணிக்கு இறுதிவரை டஃப் கொடுத்தனர்.

jaiswal
jaiswal

தொடக்கவீரர்களாக களமிறங்கிய ஜெஸ்வால் மற்றும் தனுஷ் கோட்டியான் இருவரும், முதல் விக்கெட்டுக்கே 56 ரன்களை எடுத்துவந்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். நல்ல ஸ்டிரைக்ரேட்டில் விளையாடிய ஜெய்ஸ்வாலை 39 ரன்களில் ரபடா வெளியேற்ற, தனுஷ் கோட்டியானை லிவிங்ஸ்டன் போல்டாக்கி வெளியேற்றினார். அதுவரை 82 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என நல்லநிலையிலேயே இருந்தது ராஜஸ்தான் அணி. ஆனால் ஒரு அற்புதமான ஸ்பெல்லை வீசிய ரபடா சஞ்சு சாம்சனை 18 ரன்னில் வெளியேற்ற, அவரைத்தொடர்ந்து வந்த ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.

rabada
rabada

திடீரேன விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆட்டத்திற்குள் வர, ராஜஸ்தான் வெற்றிபெற கடைசி 3 ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவையென போட்டிமாறியது. இப்போது களத்தில் அதிரடி வீரர்கள் ரோவ்மன் பவல் மற்றும் சிம்ரன் ஹெட்மயர் இருவரும் இருந்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி அடுத்த 4 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டி இலக்கை எட்டிப்பிடிக்கும் ரன்களை எளிதாக்கியது, ஆனால் 19வது ஓவரை சிறப்பாக வீசிய கேப்டன் சாம்கரன் ஒரே ஓவரில் ரோவ்மன் பவல் உட்பட இரண்டு விக்கெட்டுகளை எடுத்துவர, ஆட்டத்தில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

RR vs PBKS
இவரை வச்சிக்கிட்டா தோத்திங்க DC.. உலககிரிக்கெட்டை ஆட்டிவைத்த Fraser! LSG-ஐ வீழ்த்திய உலகசாதனை வீரர்!

இறுதிஓவர் த்ரில்லராக மாறிய போட்டி..

பரபரப்பான கட்டத்தில் அந்தபக்கமா இந்தபக்கமா என்ற அழுத்தமான நிலைக்கு போட்டி சென்றது. கடைசி 6 பந்துக்கு 10 ரன்கள் தேவையென போட்டி மாற, சிம்ரன் ஹெட்மயர் ஸ்டிரைக்கில் இருந்தார். கடைசிஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதலிரண்டு பந்துகளையும் டாட் பந்துகளாக வீச, ’ஆஹா போட்டில இன்னும் உயிர் இருக்குப்போலயே’ என பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் மூன்றாவது பந்தில் சிக்சரை பறக்கவிட்ட ஹெட்மயர், பஞ்சாப் அணியின் கொஞ்ச நேர சந்தோசத்தையும் தட்டிப்பறித்தார். அடுத்த பந்தை அர்ஷ்தீப் சிறப்பாக வீச, லாங் ஆனில் தூக்கியடித்த பந்தை பிடிப்பதில் கேப்டன் சாம் கரன் கோட்டைவிட்டார். எளிதாக இரண்டு ரன்களுக்கு சென்ற ஹெட்மயர், மீண்டும் ஸ்டிரைக்கை தக்கவைத்தார்.

ஒருவேளை சாம்கரன் அந்த பந்தை பிடித்திருந்தால் போட்டி பஞ்சாப் அணியின் பக்கம் சென்றிருக்கும். மீண்டும் ஹெட்மயரே பந்தை எதிர்கொள்ள, ஆட்டம் 2 பந்தில் 2 ரன்கள் என இருந்தது. ஆனால் 5வது பந்தை சிக்சராக மாற்றிய ஹெட்மயர் பஞ்சாப் அணியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

சிறப்பாக பந்துவீசிய ரபாடா மற்றும் சாம்கரன் இருவரும் 8 ஓவரில் 4 விக்கெட்டுகளுடன் 43 ரன்களை மட்டுமே கொடுத்து போராடினர், ஆனால் மற்றபவுலர்கள் சிறப்பாக செல்லாத நிலையில் போட்டி ராஜஸ்தான் பக்கம் சென்றது. கடந்த 4 ஐபிஎல் சீசன்களில் 8முறை மோதியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள், அதில் 7 போட்டிகளை கடைசிஓவரில் தான் முடித்துள்ளன.

RR
RR

கடந்த ஐபிஎல் தொடரில் நடந்ததை போன்றே இந்த போட்டியிலும் கேட்ச் பிடிப்பதில் ராஜஸ்தான் அணி வீரர்கள் முட்டிமோதிக்கொண்டு கோட்டைவிட்டனர், நடந்த மோசமான சம்பவத்தை மீம்போட்டு சிரிப்பாக மாற்றிய ராஜஸ்தான் அணி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்தவெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 5-ல் வெற்றிபெற்று அரையிறுதி செல்வதற்கான படிகளில் நெருங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 6 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 8வது இடத்தில் நீடிக்கிறது.

RR vs PBKS
'Umpires Indians' ஆன MI? சர்ச்சை முடிவுகளால் ரசிகர்கள் அதிருப்தி! முதல் அணியாக வெளியேறுகிறதா RCB?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com