'Umpires Indians' ஆன MI? சர்ச்சை முடிவுகளால் ரசிகர்கள் அதிருப்தி! முதல் அணியாக வெளியேறுகிறதா RCB?

நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் முகநூல்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டியில், அம்பயர்கள் சர்ச்சைக்குரிய முடிவுகளை வழங்குவது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே முட்டிய நோ-பால் சர்ச்சை தான், இண்டர்நேசனல் டி20 போட்டிகளில் கூட முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

2019ம் ஆண்டு மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் கடைசி 1 பந்துக்கு 7 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில், லசித் மலிங்கா கடைசி பந்தை நோ-பாலாக வீசியும் நோ-பால் வழங்கப்படாமல் போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். பவுலிங் லைனை தாண்டி வந்து மலிங்கா பந்தைவீசியது ரீப்ளேவில் எளிதாகவே தெரிந்தது, ஆனால் அதை அம்பயர் ஏன் நோ-பாலாக வழங்கவில்லை என்ற சர்ச்சை அப்போது பெரிதாக வெடித்தது.

2019 மும்பை மற்றும் ஆர்சிபி போட்டி - மலிங்கா நோ பால் வீசியது
2019 மும்பை மற்றும் ஆர்சிபி போட்டி - மலிங்கா நோ பால் வீசியது

அதற்குபிறகு அனைத்து டி20 போட்டியிலும் ஒவ்வொரு பந்திற்கும் நோ-பால் சரிப்பார்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
‘இது லிஸ்ட்லயே இல்லையே...’ ரோகித் சர்மாவின் ஆல்டைம் ஐபிஎல் சாதனையை உடைத்த சஞ்சு சாம்சன்!

அப்போது தொடங்கிய அம்பயர்கள் சர்ச்சையானது, நேற்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பெரிதாக வெடித்தது. நேற்றைய போட்டியில் அம்பயர்களின் மோசமான முடிவுகளை பார்த்த ரசிகர்கள் “Umpires Indians" என்ற ஹாஸ்டேக்கை எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தடுமாறிய அணியை மீட்ட பட்டிதார் - டூபிளெசி!

தீவிரமான ரசிகர்களை கொண்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்றே ஆகவேண்டிய ரைவல்ரி போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக மிகப்பெரிய டோட்டலை பதிவுசெய்யவேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் செய்தது ஆர்சிபி அணி.

MI vs RCB
MI vs RCB

ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, 3வது ஓவரிலேயே விராட் கோலியை 3 ரன்னில் வெளியேற்றிய ஜஸ்பிரித் பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். உடன் களத்திற்கு வந்த வில்-ஜேக்ஸ் 8 ரன்னில் வெளியேற 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி தடுமாறியது. ”அடிக்கிற ஒரு ஆள் கோலியும் போயாச்சு, இனி எங்க ரன் வரப்போகுது” என ஆர்சிபி ரசிகர்கள் புலம்ப, களத்திலிருந்த கேப்டன் டூபிளெசி மற்றும் ரஜத் பட்டிதார் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை எடுத்துவந்தனர்.

கடந்த போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் தடுமாறிய ரஜத் பட்டிதார், 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு தன்னுடைய ஃபார்மை மீட்டுகொண்டுவந்தார். மறுமுனையில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட டூபிளெசியும் கலக்கிப்போட 11 ஓவர்களுக்கு 100 ரன்களை எடுத்துவந்தது ஆர்சிபி அணி. எப்படியும் 200 ரன்களுக்கு மேலான டோட்டல் வரும், போட்டியில் ஆர்சிபி அணி நல்லநிலையில் இருக்கும் என எதிர்ப்பார்த்தபோதுதான், அரைசதமடித்த பட்டிதாரை ஒரு சூப்பர் பவுன்சர் மூலம் வெளியேற்றினார் ஜெரால்டு கோட்ஸீ.

5 விக்கெட்டுகளை அள்ளிய பும்ரா!

செய்யவேண்டியதை எல்லாம் தரமாக செய்துமுடித்த பட்டிதார், அணியை நல்ல நிலைமையில் வைத்துவிட்டு வெளியேறினார். இதற்கு பிறகு மேக்ஸ்வெல் இருக்கிறார், நல்ல பேட்டிங் டிராக்கில் அடித்துவெளுக்கப்போகிறார் என எதிர்ப்பார்த்த போது, களத்திற்கு வந்த மேக்ஸ்வேல் மீண்டும் 0 ரன்னில் வெளியேறி ஆர்சிபி ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கினார். “ஏன் பா இந்த பிட்ச்லதான உலகக்கோப்பைல 200 அடிச்ச” என மேக்ஸ்வெல்லை பார்த்து ரசிகர்கள் தலைமேல் கைவைக்க, களத்தில் தனியாளாக போராடிய டூபிளெசியை 61 ரன்னில் வெளியேற்றிய பும்ரா ஆர்சிபி அணியின் கையிலிருந்த போட்டியை தட்டிப்பறித்தார். உடன் அடுத்தடுத்து களத்திற்கு வந்த லோம்ரார், வைசாக் இருவரையும் கோல்டன் டக்கில் பெவிலியன் அனுப்பிய பும்ரா ஆர்சிபி அணிக்கு அடிக்குமேல் அடிகொடுத்தார்.

என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசிவரை களத்திலிருந்த தினேஷ் கார்த்திக், 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 53 ரன்களை எடுத்துவர, DK உதவியால் 196 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது ஆர்சிபி அணி.

சூர்யகுமார் அதிரடியால் எளிதாக வென்ற MI!

197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, “இந்த பவுலர்களை வச்சிக்கிட்டா சண்டைக்கு வந்தீங்க” என்பது போல திரும்பும் திசையெல்லாம் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி மிரட்டிவிட்டனர்.

இஷான் கிஷான் 200 ஸ்டிரைக்ரேட், சூர்யகுமார் 273 ஸ்டிரைக்ரேட், ஹர்திக் பாண்டியா 350 ஸ்டிரைக்ரேட் என 15 சிக்சர்களை பறக்கவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் “இப்போ எதுக்கு 278 டார்கெட்ட சேஸ் பன்ற மாதிரி இந்த அடிஅடிக்கிறிங்க”னு ஆர்சிபி பவுலர்களே புலம்பும் வகையில் இறக்கமே காட்டாமல் அடித்து நொறுக்கினர்.

இரண்டு அறுவைசிகிச்சைக்கு பிறகு மீண்டுவந்த சூர்யகுமார் யாதவ், வெறும் 17 பந்துகளுக்கு அரைசதமடித்து மிரட்டிவிட்டார். 15.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது.

சூர்யகுமார்
சூர்யகுமார்

17 வருடங்களாக இருந்துவரும் மிகப்பெரிய ஓட்டை..

17 வருடங்களாக ஆர்சிபி அணியின் பெரிய ஓட்டையாக இருந்துவரும் மோசமான பவுலிங்கானது இந்தப்போட்டியில் உச்சம் தொட்டது.

ஆர்சிபி அணியின் பவுலர்களில் ”இவரை கொண்டுவந்தா வின் பண்ணலாம், இவர் இருக்கார் விக்கெட் எடுத்துவருவார்” என்ற நம்பிக்கையளிக்கும் வீரராக ஒருவர் கூட தெரியவில்லை. 196 ரன்கள் அடித்தும் ஒரு மோசமான தோல்வியை எதிர்கொண்ட ஆர்சிபி கேப்டன் டூபிளெசி ஒருகட்டத்தில் கண்கள் சிவந்து கலங்கிய நிலையில் நம்பிக்கையே இல்லாமல் உடைந்துபோனார்.

மறுமுனையில் அபாரமான ஸ்பெல் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்தப்போட்டியிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட, விராட் கோலி “அவர் நம்முடைய இந்திய வீரர்” என்று ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டது ரசிகர்களின் இதயத்தை தொட்டது. போட்டிமுடிந்தபிறகு விராட்கோலியை ஹர்திக் பாண்டியா கட்டிக்கொண்டது பிக்சர் ஆஃப் தி டேவாக மாறியது.

ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

அம்பயர்களின் மோசமான முடிவுகளால் எழுந்த சர்ச்சை..

மும்பை அணியின் டாமினேட்டிங் வெற்றியை தாண்டி, களத்தில் அம்பயர்கள் மும்பை அணிக்கு சாதகமாக வழங்கிய முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

குறிப்பாக

- தினேஷ் கார்த்திக்கு எதிராக நோ-பால் வழங்காமல் விட்டது,

- பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மத்வால் பந்தை பிடிக்கும்போது பவுண்டரி லைனில் டச் செய்ததை பார்க்காமல் 1 ரன் வழங்கியது,

- மும்பை அணிக்கு இருந்த ரிவியூ தீர்ந்தபிறகும் களநடுவர் நாட்-அவுட் கொடுத்த பிறகும் மும்பை அணிக்காக ரிவியூ எடுக்கப்பட்டது

- ஒயிடு இல்லாத பந்துக்கு ஆர்சிபி அணிக்கு ஒயிடு வழங்கியது

என அம்பயர்கள் வழங்கிய பல முடிவுகள் சர்ச்சையாக மாறி போட்டியின் முடிவில் பெரிய பங்காற்றின. அதைப்பார்த்த ரசிகர்கள் “Umpires Indians" என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியை ட்ரோல் செய்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
“டி20 WC-ல் கோலியை இந்தியா தேர்வுசெய்யாது என நம்புகிறேன்” - மேக்ஸ்வெல் கூறும் அதிர்ச்சி காரணம்!

6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கும் ஆர்சிபி அணி, மோசமான இடத்தில் நீடிக்கிறது.

MI vs RCB
MI vs RCB

இன்னும் 8 போட்டிகளில் 7 அல்லது 6 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆஃப்க்கான ரேஸில் உயிர்ப்புடன் இருக்க முடியும். மாறாக இதேநிலைமை தொடர்ந்தால் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறும் நிலைக்கு செல்லும். அடுத்தடுத்த போட்டியில் ஆர்சிபி அணி என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com