மானுட மாற்றத்தின் ஆணிவேர்களான ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் சமூக அக்கறையோடு திகழும் செய்தி ஊடகமான "புதிய தலைமுறை" குழுமம், "கனவு ஆசிரியர்" என்ற அமைப்போடு இணைந்து "புதிய தலைமுறை ஆசிரியர் விருது " என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
ஆசிரியர்களை மதித்து அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தும் போது சமூகமும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதுகளை வழங்கி உலகிற்கு அடையாளப்படுத்தும் முயற்சியே "புதிய தலைமுறை ஆசிரியர் விருது".
- அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் ஆகிய மூன்று வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் விருது பெறுவதற்கான தகுதியானவர்களாவார்கள்.
- தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும் இதற்குப் பொருத்தமானவர்களே.
- ஆசிரியர் விருதுக்கான பிரிவுகளுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தரப்பட்டுள்ள விவரங்களைப் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
- விருதுக்குத் தகுதியானவர்களைப் மற்றவர்களும் பரிந்துரை செய்யலாம்.
- விண்ணப்பத்தோடு இதர சான்றாவணங்களான புகைப்படங்கள், காணொலிகள், ஊடக வெளியீடுகள், மற்றும் சான்றிதழ்களையும் இணைத்து தொகுத்து அனுப்பலாம்.
பல்துறை சாதனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய நடுவர் குழுவினரால் விருதாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நடுவர்களின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15 July 2025