kkr
kkr x

கோப்பைக்கு மிக அருகில் KKR! Playoff வாய்ப்பை இழக்கும் LSG? NO.1 இடத்திற்கு சென்ற கம்பீர் படை!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

கொல்கத்தா அணியை இரண்டு முறை கோப்பைக்கு அழைத்துச்சென்ற வெற்றிக்கேப்டனான கவுதம் கம்பீர், அந்த அணிக்கு ஆலோசகராக கம்பேக் கொடுத்ததிலிருந்தே பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் மிரட்டிவருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதல் பாதியில் பந்துவீச்சில் பவுலர்கள் சொதப்பினாலும், தற்போது பந்துவீச்சிலும் மிளிர்ந்துவரும் KKR அணி கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக அனைத்து அணிகளையும் மிரட்டிவருகிறது.

ஒரு பரபரப்பான போட்டியில் லக்னோ அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொண்ட கொல்கத்தா அணி, முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் எதற்காக கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தோம் என வேதனை படுமளவு ஒரு அபாரமான ஆட்டத்தை ஆடியது கொல்கத்தா.

kkr
புலி பூனையாக மாறிய கதை.. ஒரே முடிவால் காலியான LEGACY! 257 ரன்கள் குவித்த DC! MI பரிதாப தோல்வி!

அதிரடியில் மிரட்டிய சுனில் நரைன்..

எப்போதும் போல தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இருவரும் அதிரடி சரவெடி என வெளுத்துவாங்கினர். 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என சால்ட் ஒருபுறம் துவம்சம் செய்ய, 6 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என லக்னோ அணிக்கு மைதானத்தை சுற்றிக்காட்டிய சுனில் நரைன் மரண அடி கொடுத்தார். பிலிப் சால்ட் 32 ரன்னில் வெளியேறினாலும், 12 ஓவர்கள் வரை களத்திலிருந்த சுனில் நரைன் 81 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியை 140 ரன்களுக்கு எடுத்துவந்து மிரட்டிவிட்டார். அடைமழை வெளுத்துவாங்கி ஓய்ந்தது போல, சுனில் நரைன் அவுட்டானதும் சிக்சர் மழை ஓய்ந்ததாக பெருமூச்சு விட்டனர் லக்னோ பவுலர்கள்.

சுனில் நரைன்
சுனில் நரைன்

ஆனால் நரைன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ரகுவன்சி இருவரும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என மிரட்டிவிட, 15 ஓவரில் 170 ரன்களை எட்டியது கொல்கத்தா அணி. பின்னர் களத்திற்கு வந்த ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அவர்களுடைய பங்கிற்கு வெளுத்துவாங்க, கடைசியாக வந்த ரமன்தீப் சிங் வெறும் 6 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் அடித்துமிரட்ட 235 ரன்கள் என்ற இமாலய டோட்டலை எட்டியது KKR அணி.

kkr
மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது.. யாருமே கேப்டனை மதிப்பது இல்லை! Hardik-ன் நிம்மதியை சிதைத்த MI!

மிக மோசமான தோல்வியை சந்தித்த LSG!

மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி நம்பிக்கையுடன் தொடங்கினாலும், மார்கஸ் ஸ்டொய்னிஸை தவிர வேறு எந்த வீரர்களும் அதிரடியை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினர். லக்னோ அணியில்தான் இருக்கிறோமா எனுமளவு தொடர்ந்து மோசமாக செயல்பட்டுவரும் அர்ஷின் குல்கர்னி 2வது ஓவரிலேயே நடையை கட்ட, கேப்டன் கேஎல் ராகுல் 21 பந்தில் 25 ரன்கள் அடித்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையில், 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு தனியாளாக போராடிய ஸ்டொய்னிஸும் 36 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

stoinis
stoinis

அதற்கு பிறகு எப்படியும் நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஆயுஸ் பதோனி, டர்னர் இருக்கிறார்கள், ரன்களை எடுத்துவருவார்கள் என நினைத்தால், 5, 10, 15, 16 என சொற்ப ரன்களில் வெளியேறிய அனைவரும் கோட்டைவிட்டனர். அபாரமாக பந்துவீசிய ஹர்சித் ரானா மற்றும் வருன் சக்கரவர்த்தி இருவரும் 6 விக்கெட்டுகளை கைப்பற்ற, 137 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது.

KKR
KKR

98 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த லக்னோ அணி, ஐபிஎல் வரலாற்றில் தங்களுடைய மிக மோசமான தோல்வியை பதிவுசெய்தது.

மாபெரும் வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலில் +1 ரன்ரேட்டுடன் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மீண்டும் ஒருமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற சுனில் நரைன், கொல்கத்தா அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராக மாறி சாதனை படைத்தார்.

kkr
அதே Meme..அதே Troll.. இந்தமுறை அடித்தது சென்னை! PBKS-ஐ வச்சிசெய்த CSK ரசிகர்கள்! ஜடேஜா படைத்த சாதனை!

கோப்பை வெல்லும் முடிவில் KKR!

தொடக்கத்தில் பல வீரர்கள் சரியாக செயல்படாத போதும் தொடர்ந்து வீரர்களை ஆதரித்து வாய்ப்பு கொடுத்துவரும் கவுதம் கம்பீர், அணிக்குள் ஒரு பாசிட்டிவான எனர்ஜியை உற்பத்தி செய்துவருகிறார். அவருடைய தலைமையில் சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்கவீரர்களாகவும், வெங்கடேஷ் ஐயர், ரகுவன்சி, ஸ்ரேயாஸ் ஐயர் மூன்று பேரும் மிடில் ஆர்டர் வீரர்களாகவும், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ரிங்கு சிங் என மூன்று பேரும் பினிசிங் வீரர்களாகவும் மிரட்டிவருகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் முன்பு இருந்ததைவிட சுனில் நரைன், வருன் சக்கரவர்த்தி, ஹர்சித் ரானா, ஆண்ட்ரே ரஸ்ஸல் முதலிய 4 பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். ஒட்டுமொத்தமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லக்கூடிய வலுவான ஒரு அணியாக ஜொலித்து வருகிறது.

KKR
KKR

அதேபோல புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு சரிந்திருக்கும் லக்னோ அணி, மீதமிருக்கும் 3 போட்டிகளில் மூன்றிலும் வெல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு போட்டி SRH அணியுடன் இருப்பதால், அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பு கத்திமுனையில் தொங்குவது போல வாழ்வா-சாவா நிலைக்கு மாறியுள்ளது.

kkr
4வது இடத்தை குறிவைக்கும் RCB! CSK தான் அடுத்த பலியாடு! அரையிறுதியை தக்கவைக்குமா?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com