புலி பூனையாக மாறிய கதை.. ஒரே முடிவால் காலியான LEGACY! 257 ரன்கள் குவித்த DC! MI பரிதாப தோல்வி!

மும்பை இந்தியன்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.
MI vs DC
MI vs DCX

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் இரண்டாம் பாகமானது பல்வேறு திருப்பங்களையும், சுவாரசியங்களையும் கொடுக்க கூடியது. அதல பாதாளத்தில் எங்கேயோ பத்தாவது இடத்தில் இருக்கும் அணிகள் கூட, தரமான கம்பேக் கொடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தும். அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரானது ஒருபடி மேலே சென்று, அனைத்து அணிகளும் வெற்றிக்காக வாழ்வா-சாவா போராட்டத்தை நடத்திவருகின்றன.

பொதுவாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற மூன்று வெற்றிகரமான அணிகள் மட்டுமே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தமுறை அந்த மூன்று அணிகளை விடவும் மற்ற அனைத்து அணிகளும் பலம்வாய்ந்த அணிகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சொல்லப்போனால் எப்போதும் இல்லாத வகையில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி மூன்று அணிகளும் மரண அடி வாங்கி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்cricinfo

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரையில், கேப்டன்சி மாற்றத்திற்கு பிறகு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிவருகிறது. அவசரப்பட்டு ஹர்திக் பாண்டியாவை எடுத்துவந்துவிட்டோமோ என புலம்பும் வகையில் படுமோசமான தோல்விகளை மும்பை அணி சந்தித்து வருகிறது.

MI vs DC
”ஹர்திக் பாண்டியாவிற்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை” - கடுமையாக விளாசிய இர்ஃபான் பதான்!

மரண அடி கொடுத்த Fraser!

வெல்ல வேண்டிய முக்கியமான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது ஹர்திக் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

’முதல்ல பேட்டிங் வர சொல்லி தப்பு பண்ணிட்டிங்களே ஹர்திக் பாண்டியா’ என ஒரு சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, மும்பை அணிக்கு மரண அடி கொடுத்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் ஜேக் ஃப்ரேசர், முதல் பந்திலிருந்தே அடிச்சா சிக்சர்-பவுண்டரி தான் என வெறித்தனமான ஆட்டத்தை ஆடினார். லுக் வுட் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என பறக்கவிட்டு 19 ரன்களை விரட்டிய ஜேக் ஃப்ரேசர் மிரட்டினார். அவரை கண்ட்ரோல் செய்வதற்காக பும்ராவை ஹர்திக் பாண்டியாவை எடுத்துவர, பும்ராவிற்கு எதிராக முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய ஃப்ரேசர் “யார் சாமி நீ” என எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். அதற்கு பிறகு பவர்பிளேவில் ரன் வேட்டை நடத்திய ஜேக் ப்ரேசர், 11 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என திரும்பிய பக்கமெல்லாம் வானவேடிக்கை காட்ட, 7 ஓவருக்கே 114 ரன்களை எடுத்துவந்த டெல்லி அணி ஒரு மிகப்பெரிய டோட்டலுக்கு அஸ்திவாரம் போட்டது.

Fraser
Fraser

ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் மும்பை பவுலர்கள் தடுமாற, ரன்கள் செல்வதை ஜீரணிக்க முடியாத ஹர்திக் பாண்டியா என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தார். 27 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்து மிரட்டிய ஃபிரேசரை சாவ்லா வெளியேற்ற, ஒருவழியாக மூச்சுவிட நேரம் எடுத்துக்கொண்டது மும்பை அணி. ஆனால் ஃப்ரேசர் விட்டுசென்ற இடத்திலிருந்து ஒவ்வொரு டெல்லி பேட்டர்களும் ருத்ரதாண்டவம் ஆட, ரன்வேகம் குறைந்தபாடில்லை. அபிஷேக் போரல் 3 பவுண்டரிகள், 1 சிக்சர், சாய் ஹோப் 5 சிக்சர்கள் என துவம்செய்ய, களத்திற்கு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் அவருடைய பங்கிற்கு 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பொளந்துகட்டினார்.

stubbs
stubbs

அதுவரை 220 ரன்கள் டோட்டலை நோக்கிதான் டெல்லி அணியின் நகர்வு இருந்தது. ஆனால் அதற்கு பிறகு மும்பை அணி என வந்துவிட்டாலே ருத்ரதாண்டவம் ஆடும் ஸ்டப்ஸ், 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்க 257 ரன்கள் என்ற இமாலய டோட்டலுக்கு சென்றது டெல்லி அணி.

MI vs DC
யார் சாமி நீ? ஒரு ரன் கூட கொடுக்காமல் 7 விக்கெட்டுகள்! உலகசாதனை படைத்த இந்தோனேசியா பவுலர்!

இறுதிவரை போராடிய திலக் வர்மா..

258 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரர்களிடம் இருந்து மிகப்பெரிய ரன்சேஸிங் தேவைப்பட்டது. ஆனால் பேட்டிங்கில் சொதப்பிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் விரைவாகவே வெளியேற, களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவும் பவர்பிளே முடிவிலேயே நடையை கட்டினார். 65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என மும்பை அணி தடுமாறினாலும், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

ஸ்பின்னர்களை டாமினேட் செய்த ஹர்திக் பாண்டியா, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து ரன்களை எடுத்துவந்தார். மறுமுனையில் வேகப்பந்துவீச்சாளர்களை டார்கெட் செய்த திலக் வர்மா, 4 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த போது கேப்டன் ஹர்திக் பாண்டியா, நேஹல் வதேரா இரண்டு பேரையும் அடுத்தடுத்து வெளியேற்றிய டெல்லி அணி கம்பேக் கொடுத்தது.

திலக் வர்மா
திலக் வர்மா

தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷிக் சலாம் டெல்லி அணியின் சிறந்த பவுலராக திகழ்ந்தார். மும்பை அணியின் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக யார்க்கர் பந்துகளை வீசிய சலாம், ரன்கள் செல்லும் பொதெல்லாம் இழுத்துப்பிடித்தார். ஆனால் என்னதான் டெல்லி அணி இழுத்துப்பிடித்தாலும் களத்திலிருந்த திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் இருவரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரே ஓவரில் 21 ரன்களை பறக்கவிட்ட திலக் வர்மா மீண்டும் போட்டிக்குள் மும்பை அணியை எடுத்துவர, 63 ரன்களில் திலக்வர்மாவை வெளியேற்றிய டெல்லி அணி கம்பேக் கொடுத்தது.

கடைசியாக களத்திலிருந்த டிம் டேவிட் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என பறக்கவிட்டாலும் அவர்களால் இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை. முடிவில் 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. சிறப்பாக பந்துவீசிய சலாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஜேக் பிரேசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

MI vs DC
“டி20 WC-ல் இந்தியாவை வழிநடத்த ரோகித் தகுதியற்றவர்..” - முன்னாள் KKR டைரக்டர் அதிர்ச்சி கருத்து!

ஒரே முடிவால் உடைந்த மும்பை LEGACY!

9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 9வது இடத்தில் தத்தளித்து வருகிறது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறும். தொடர்ந்து கேப்டன்சியில் அழுத்தத்தை சந்தித்துவரும் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில், பவுலர்களை நோக்கி ஆவேசமாக கத்தி விரக்தியை வெளிப்படுத்தினார். 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை விட்டுவிட்டு, ஹர்திக் பாண்டியாவை அதிக விலை கொடுத்து அழைத்துவந்திருக்கும் மும்பை நிர்வாகத்தை “பணத்தால் வெற்றியை வாங்கமுடியாது, அனுபவத்தால் தான் வெற்றியை வாங்க முடியும் என்பதை மும்பை அணி புரிந்திருக்கும்” என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

hardik pandya
hardik pandya

அதேநேரத்தில் இளம் வீரர்களை வைத்து தரமாக விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

MI vs DC
“நாங்கள் வெற்றிக்கு திரும்பிவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது..” - RCB வீரர் நம்பிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com