அதே Meme..அதே Troll.. இந்தமுறை அடித்தது சென்னை! PBKS-ஐ வச்சிசெய்த CSK ரசிகர்கள்! ஜடேஜா படைத்த சாதனை!

பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது சிஎஸ்கே அணி.
csk vs pbks
csk vs pbksbcci

கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணி, வெற்றிக்கு பிறகு “சோலி முடிஞ்சது” என்றும், “எங்கள் வெற்றிக்கு தலதான் காரணம்” எனவும் மீம் போட்டு பங்கமாக கலாய்த்தது. அதைப்பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் “ஆணவத்துல ஆடாதிங்க” என்றும், “எல்லாம் எங்க நேரம், திருப்பி பதிலடி கொடுப்போம்” என்றும் கமெண்ட் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த போட்டியில் வென்று சென்னை அணி பதிலடி கொடுக்குமா என்ற சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புடன் தொடங்கியது போட்டி. ஆனால் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, சிஎஸ்கே அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மிரட்டிவிட்டது.

csk vs pbks
“ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை; அது எங்களுக்கே கடினமான முடிவு” - அஜித் அகர்கர் வருத்தம்

ஜடேஜாவால் நல்ல டோட்டலை எட்டிய CSK!

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில், எப்போதும் போல எதற்கு அணியில் இருக்கிறோம் என்பது தெரியாமல் இரண்டாவது ஓவரிலேயே நடையை கட்டினார் ரஹானே. ”ரஹானேவுக்கு இவ்ளோ சான்ஸ் கொடுக்கிறிங்க, அந்த ரச்சினுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா” என்று சிஎஸ்கே ரசிகர்கள் புலம்ப, 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ருதுராஜ் மற்றும் மிட்செல் இருவரும் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி ரன்களை எடுத்துவந்தனர்.

என்னதான் விரைவாகவே முதல் விக்கெட்டை இழந்தாலும் 6 ஓவருக்கு 60 ரன்களை எடுத்துவந்த இந்த ஜோடி, ஒரு நல்ல டோட்டலுக்கு அடித்தளம் போட்டது. ஆனால் எல்லாம் சரியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில், 8வது ஓவரை வீசவந்த ராகுல் சாஹர், கேப்டன் ருதுராஜை 32 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் தூணாக இருந்துவரும் ஷிவம் துபேவை 0 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார். உடன் மிட்செல்லும் 30 ரன்னில் அவர்களின் பின்னாலேயே நடையை கட்ட, 75 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி தடுமாறியது.

jadeja
jadeja

அதற்குபிறகு மிடில் ஓவர்களை கண்ட்ரோல் செய்த ராகுல் சாஹர் மற்றும் ஹர்சல் பட்டேல் இருவரும் ரன்களை விட்டுக்கொடுக்காமல் சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் போட்டனர். மொயின் அலி, சாண்ட்னர் அனைவரும் சொதப்பிவிட்டு வெளியேற, களத்திற்கு வந்த தோனியும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இப்போது அனைவரது நம்பிக்கையும் ஜடேஜாவின் மீதே இருந்தது. பொறுப்பை தனதாக்கி சிறப்பாக விளையாடிய ரவிந்திர ஜடேஜா, 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 43 ரன்கள் அடிக்க, கடைசியாக களத்திற்கு வந்த ஷர்துல் தாக்கூர் அவருடைய பங்கிற்கு 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்து ரன்களை எடுத்துவந்தார். 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் என்ற டீசண்ட்டான டோட்டலை பதிவுசெய்தது சிஎஸ்கே அணி.

csk vs pbks
“ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் யாரும் இல்லை” - அஜித் அகர்கர் ஆதரவு!

மிரட்டிய தேஸ்பாண்டே.. மேஜிக் செய்த ஜடேஜா!

நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 168 ரன்கள் இலக்கை விரைவாகவே எட்டிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் முதல் ஓவரையே சாண்ட்னர் வைத்து ஆரம்பித்த ருதுராஜ், பஞ்சாப் அணியை முதல் ஓவரிலேயே பேக்ஃபுட்டில் தள்ளினார். சாண்ட்னர் டைட்டாக பந்துவீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, இரண்டாவது ஓவரை வீசிய துஷார் தேஸ்பாண்டே அடுத்தடுத்த இரண்டு அபாரமான பந்துகளில் பேர்ஸ்டோ மற்றும் ரைல் ரோஸ்ஸோவின் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்தார். 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாற, மூன்றாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த பிரப்சிம்ரன் மற்றும் ஷசாங் சிங் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன்களை எடுத்துவந்தனர்.

தேஸ்பாண்டே
தேஸ்பாண்டே

அடுத்தடுத்து ஷசாங் சிங் 4 பவுண்டரிகளை விரட்ட, 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மிரட்டிய பிரப்சிம்ரன் ஆபத்தான வீரராக மாறினார். ஆனால் மீண்டும் பந்துவீச வந்த Santner ஷசாங் சிங்கை வெளியேற்ற, அதற்கு பிறகு எல்லாமே ஜடேஜா மயமாக மாறியது. ஒரு தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா பிரப்சிம்ரனை 30 ரன்னில் வெளியேற்றியது மட்டுமில்லாமல், அடுத்த ஒரே ஓவரில் சாம்கரன் மற்றும் அஷுதோஸ் சர்மா இரண்டுபேரையும் பெவிலியன் அனுப்பி பஞ்சாப் அணிக்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.

ஜடேஜா
ஜடேஜா

முக்கியமான வீரர்கள் அனைவரும் சொதப்பிவிட்டு வெளியேற, விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவை 0 ரன்னில் வெளியேற்றிய சிமர்ஜீத் சிங் பஞ்சாப் அணியின் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளிவைத்தார். 90 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 139 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

csk vs pbks
4வது இடத்தை குறிவைக்கும் RCB! CSK தான் அடுத்த பலியாடு! அரையிறுதியை தக்கவைக்குமா?

ஜடேஜா படைத்த பிரமாண்ட சாதனை!

28 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அசத்தலான வெற்றியை பதிவுசெய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

43 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் என ஒரு ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜடேஜா
ஜடேஜா

அதேநேரத்தில் தன்னுடைய 16வது ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, தோனியை பின்னுக்கு தள்ளி சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார்.

csk vs pbks
மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது.. யாருமே கேப்டனை மதிப்பது இல்லை! Hardik-ன் நிம்மதியை சிதைத்த MI!

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுத்த சிஎஸ்கேர சிகர்கள்!

போட்டியில் வென்ற பிறகு கடந்த போட்டியின் தோல்வியில் கலாய்த்த பஞ்சாப் கிங்ஸ் அணியை பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்த சிஎஸ்கே ரசிகர்கள், "Done and Dusted" என்பதை டிரெண்ட்டிங்கில் எடுத்துவந்து பதிலடி கொடுத்தனர்.

சிஎஸ்கே ரசிகர்கள்தான் ஒருபுறம் கலாய்க்கிறார்கள் என்றால், சிஎஸ்கே அணியும் “பாட்ஷா பட மீமை பதிவிட்டு” பதிலடி கொடுத்தது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கும் சிஎஸ்கே அணி, பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை பலப்படுத்தி உள்ளது.

csk vs pbks
‘3 ஐபிஎல் அணியிலிருந்து 12 வீரர்கள் தேர்வு..’ ஓரங்கட்டப்பட்ட 2 அணி! WC சென்ற IPL அணி வீரர்கள் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com