ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருpt web

RCBக்கு கிடைக்கிறதா கூடுதல் பலம்.. அணிக்குத் திரும்பும் முக்கிய வீரர்? சிக்சர் மழை பொழியுமா?

ஆர்சிபி அணியில் டிம் டேவிட்டின் பணி தெளிவானது.. குறைவான பந்துகள்.. அதிகமான ரன்கள்.. களத்தில் இருக்கும்வரை பவுண்டரிகளை சேர்த்துகொண்டே இருக்க வேண்டும்.. இதே வேலையை நான்கு அல்லது ஐந்தாமிடத்தில் களமிறங்கியும் மேற்கொள்ளலாம் என்பது வல்லுநர்கள் வாதம்...
Published on

2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் படுகெத்தாக நுழைந்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. லீக் சுற்றின் முடிவில் 14 போட்டிகளில் 9ல் வென்று 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தினைப் பிடித்திருந்தது.

ப்ளேஆஃப் சுற்றில் ஸ்ரேயாஷ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆர்சிபி தனது சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப் அணியை 101 ரன்களுக்குள் சுருட்டியது. பின் பேட்டிங் செய்த அந்த அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கினை எட்டிப்பிடித்து ஃபைனலுக்குள்ளும் நுழைந்தது. இறுதிப்போட்டியில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ளும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் தனது முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில்தான் டிம் டேவிட் இறுதிபோட்டியில் விளையாடுவது குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. லீக் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது டிம் டேவிட் தொடை தசைநார் காயத்தினால் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக ஆர்சிபி விளையாடிய கடைசி இரு போட்டிகளையும் தவறவிட்டார். ஆனால், தற்போது டிம் டேவிட் மிகவிரைவாக குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
போர்க்கதை ஆயிரம்.. இவன் பேரின்றி முடியாதே! ஸ்ரேயாஷ் தலைமையும்.. பஞ்சாப் எழுச்சியும்..

2021 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஒரேயொரு போட்டியில் விளையாடியிருந்தார் டிம் டேவிட். 2022 முதல் 2024 வரையிலான மூன்று சீசன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அங்குதான் டிம் டேவிட் என்றால் ஃபினிஷர் என்ற பெயர் கிடைத்தது. ஏனெனில் 37 போட்டிகளில் 658 ரன்களைக் குவித்துள்ளார். இந்த சீசன் முழுவதும் ஆர்சிபி அணிக்காக டிம் டேவிட் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஃபினிஷர் ரோலில் அணிக்குத் தேவையான பங்களிப்பை சிறப்பாகச் செய்து வருகிறார். இதுவரை 9 இன்னிங்ஸ்களில் 62.33 என்ற சராசரியில் 185.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடியுள்ளார். மொத்தமாக 187 ரன்களை எடுத்துள்ள அவர், முக்கியமான போட்டியொன்றில் அரைசதமும் அடித்திருந்தார்.

டிம் டேவிட்டின் ஃபார்மை கருத்தில் கொண்டு அவரை முன்னதாக களமிறக்க வேண்டுமென்ற குரல்களும் கிரிக்கெட் உலகில் எதிரொலித்தன. ஏனெனில், ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட்டும், விராட் கோலியும் அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்க்கின்றனர். படிக்கல் ப்ளேயிங் 11ல் இருந்தவரை அவரும் அதே அதிரடியைக் கைக்கொண்டிருந்தார். ஆனால், சமீபத்திய போட்டிகளில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ரஜத் படிதாரும், இன்கன்ஸிஸ்டென்ஸியில் இருக்கும் ஜிதேஷ் சர்மாவும் மிடில் ஆர்டரில் ஆர்சிபின் ரன் எடுக்கும் வேகத்தைக் குறைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதோடு, இறுதியில் ஷெபர்ட் மற்றும் டிம் டேவிட் என இரு ஃபினிஷர்கள் இருக்கும்போது, ஒருவரால் மட்டுமே முழுவீச்சில் செயல்பட முடியுமென்றும், ஒருவரால் பக்கபலமாக மட்டுமே இருக்கமுடியுமென்றும் தெரிவித்தனர்.. இதையொட்டியே, டிம் டேவிட்டிற்கு அதிகமான பந்துகளைக் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன..

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பயம் ஒன்னும் சும்மா வரல! நாங்க செஞ்ச சம்பவம் அப்படி!

ஆர்சிபி அணியில் டிம் டேவிட்டின் பணி தெளிவானது.. குறைவான பந்துகள்.. அதிகமான ரன்கள்.. களத்தில் இருக்கும்வரை பவுண்டரிகளை சேர்த்துகொண்டே இருக்க வேண்டும்.. இதே வேலையை நான்கு அல்லது ஐந்தாமிடத்தில் களமிறங்கியும் மேற்கொள்ளலாம் என்பது வல்லுநர்கள் வாதம்... அவர் முன்னதாக வந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்கின்றனர். இத்தகைய சூழலில்தான் டிம் டேவிட்டும் காயம் காரணமாக ஆட முடியாத சூழல் உண்டானது.

இந்நிலையில், அவரது உடற்தகுதி குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஜத் படிதார், மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகிறார்கள் என்றும் விரைவில் அவரது உடற்தகுதி குறித்து தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த இரு போட்டிகளில் டிம் டேவிட் இல்லாமல்தான் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும், டிம் டேவிட் இருப்பது அணிக்கு மேலும் பலம்.. ஏனெனில் இரண்டு மூன்று சிக்சர்கள் கூட ஆட்டத்தினை மாற்றக்கூடிய வல்லமை கொண்டது என்பதால் டிம் டேவிட் அணியில் இருப்பது ஆர்சிபி பேட்டர்களுக்கு கூடுதல் பலத்தினை அளிக்கும்....

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சாய் சுதர்சன் ஏன் குஜராத் டைட்டன்ஸ்-க்கும், இந்திய அணிக்கும் தேவை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com