விரைவில் அமெரிக்கா.. பிரிவுக்கு முற்றுப்புள்ளி? மீண்டும் படங்களைப் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா மனைவி!

ஹர்திக் பாண்டியா உடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை அவரது மனைவி மீண்டும் பகிர்ந்திருப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியா - நடாசா
ஹர்திக் பாண்டியா - நடாசாட்விட்டர்

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்-சும் கடந்த 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதற்கு உதாரணமாய், இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை நடாஷா ஸ்டான்கோவிச் தன்னுடைய வலைதளங்களில் இருந்து நீக்கியதும், அதுபோல் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்பட்டது.

எனினும், இத்தகவலை ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாஷாவோ யாரும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கிடையே, டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. அவர், வேறு நாட்டில் தனிமையில் பொழுதைக் கழித்ததாகக் கூறப்பட்டது.

இதையும் படிக்க: T20 WC 2024 | டி20 வரலாற்றில் முதன்முறை.. புதிய சாதனை படைத்த நமீபியா பவுலர்!

ஹர்திக் பாண்டியா - நடாசா
குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

இந்தச் சூழலில், ஹர்திக்கின் சகோதரர் க்ருணால் பாண்டியா பகிர்ந்திருந்த படம் ஒன்றுக்கு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பிறகு, தன்னுடைய பக்கத்தில், இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனித்து நடந்து செல்லும் படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது வைரலானதுடன், ரசிகர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிச் மீண்டும் தனது கணவருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ஹர்திக் பாண்டியா உடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்து, ‘அனைத்துப் பெருமைகளும் கடவுளுக்கு’ எனப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் விவகாரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் நடாஷா, டி20 உலகக்கோப்பை போட்டியைப் பார்க்க நியூயார்க் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: கம்பீரின் ரகசியத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்... India Head Coach பதவிக்கு ஆபத்தா?

ஹர்திக் பாண்டியா - நடாசா
குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com