குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனித்து நடந்துசெல்லும் படத்தை ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா பகிர்ந்திருப்பதால், ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
natasastankovic page
natasastankovic pageinsta

மும்பை அணியின் தோல்வி ஒருபுறமிருக்க, மறுபுறம் ஹர்திக் பாண்டியாவுக்கு அவருடைய குடும்பப் பிரச்னை தலைவலியை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம், ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்-சும் கடந்த 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இருவரும் இணைந்திருந்த புகைப்படங்கள் வலைதளங்களில் நீக்கப்பட்டிருப்பதும், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக்கின் மனைவி நடாஷா பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. எனினும், இத்தகவலை ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாஷாவோ யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிக்க: India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

natasastankovic page
குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா இன்ஸ்டா பக்கத்தில், தனது மகன் கவிர் மற்றும் ஹர்திக்கின் மகன் அகஸ்தியா ஆகியோரைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டு, ’மகிழ்ச்சியான இடம்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹர்திக்கின் மனைவி நடாஷா பதில் அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் அவர்.

அதில் ஒன்று, நடாஷா லிஃப்டில் நின்றபடி செல்ஃபி எடுக்கும் படம். மற்றொன்று, இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனித்து நடந்து செல்லும் படம். இந்த இரண்டு படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எனினும், இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனித்து நடந்துசெல்லும் படத்தை நடாஷா பகிர்ந்திருப்பதால், ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் சிலர், தனது மகன் மீதான அன்பை, நடாஷா வெளிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: Gpay, PhonePe-க்கு போட்டி.. அதானிக்கு முன்பாக களமிறங்கிய அம்பானி.. சலுகைகளுடன் Jio App தொடக்கம்!

natasastankovic page
IPL| MI தொடர் தோல்விக்கு குடும்ப பிரச்னை காரணமா.. மனைவியைப் பிரிகிறாரா ஹர்திக் பாண்டியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com