குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்றிற்கு, ஹர்திக்கின் மனைவி நடாசா புன்னகையான எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.
க்ருணால் பாண்டியா
க்ருணால் பாண்டியாஇன்ஸ்டா

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தோல்வி ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் அவ்வணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே அணியின் தோல்வியினால் அழுத்தத்தில் இருக்கும் அவருக்கு, அடுத்த சோதனையாக அவர் வீட்டு குடும்பப் பிரச்னை எழுந்துள்ளது. ஆம், ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்-சும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் இணைந்திருந்த புகைப்படங்கள் வலைதளங்களில் நீக்கப்பட்டிருப்பதும், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக்கின் மனைவி நடாசா பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

எனினும், இத்தகவலை ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாசாவோ யாரும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூயார்க் சென்றுள்ளது. ஆனால், இவர்களுடன் ஹர்திக் பாண்டியா செல்லவில்லை எனவும், அவர் வேறு நாட்டில் தனிமையில் விடுமுறையைக் கழிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குடும்பச் சூழ்நிலை மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தோல்வி உள்ளிட்டவற்ற காரணங்களால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து விடுபடுவதற்காக சில நாட்கள் வேறு நாட்டில் அவர் விடுமுறையைக் கழிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: India Head Coach| “தோனி வந்தால் சிறப்பாக இருக்கும்..” - குறிவைக்கும் விராட் கோலியின் குரு!

க்ருணால் பாண்டியா
நியூயார்க் சென்றடைந்த இந்திய அணி.. வேறு நாட்டில் தனிமையில் விடுமுறையை கழிக்கும் ஹர்திக்.. பின்னணி?

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், தனது மகன் கவிர் மற்றும் ஹர்திக்கின் மகன் அகஸ்தியா ஆகியோரைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டு, ’மகிழ்ச்சியான இடம்’ எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹர்திக்கின் மனைவி நடாசா பதில் அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர், புன்னகை முகத்துடன் கூடிய இதயக் கண்கள் எமோஜியைப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, ஹர்திக் குடும்பத்திற்கு ஓர் ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இணையத்தில் வைரலாகி வரும் இந்தப் பதிவின்மூலம், ஹர்திக் மற்றும் நடாசா தம்பதிகள் இணைய வாய்ப்பிருக்கிறது எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: பாலியல் புகார் | ”பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

க்ருணால் பாண்டியா
IPL| MI தொடர் தோல்விக்கு குடும்ப பிரச்னை காரணமா.. மனைவியைப் பிரிகிறாரா ஹர்திக் பாண்டியா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com