கம்பீரின் ரகசியத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்... India Head Coach பதவிக்கு ஆபத்தா?

’கவுதம் கம்பீர் ஒரு சோம்பேறியான வீரர்’ என, முன்னாள் வீரரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.
காம்பீர், தினேஷ் கார்த்திக்
காம்பீர், தினேஷ் கார்த்திக்எக்ஸ் தளம்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதற்கான விண்ணப்பங்கள் பிசிசிஐக்கு அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரே, இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கம்பீரிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இதுதொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்த கம்பீர், “நான் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதைவிட பெரிய மரியாதை எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!

காம்பீர், தினேஷ் கார்த்திக்
India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

இந்த நிலையில், ’கவுதம் கம்பீர் ஒரு சோம்பேறியான வீரர்’ என, முன்னாள் வீரரும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது. இதுகுறித்த உரையாடலின்போது அவர், “நான் பார்த்ததிலேயே மிகவும் சோம்பேறித்தனமான ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது கம்பீர்தான். அவர் எந்த வேலையும் செய்யமாட்டார். இதற்கு நான் ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். நாங்கள் இந்திய ஏ அணிக்காக ஒருமுறை விளையாண்டபோது எல்லோரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

அப்போது அறையில் படுத்துக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த கம்பீர், நான் அந்த வழியாகச் சென்றதைப் பார்த்து, திடீரென என்னை அழைத்தார். நானும் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தை சொல்லப் போகிறார் என்று உடனே அறைக்குள் சென்றேன். அப்போது, ’அந்த மேஜையில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து சேனலை மாற்று’ என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு ஷாக் ஆனது. ஆனாலும், எப்படி இவர் விளையாட்டுத் துறையில் பிரபலமாக இருக்கின்றார் என்று நான் நினைத்தேன். அவரை நான் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. என் மனதில் இருந்த ஒரு விஷயத்தைத்தான் சொன்னேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது கம்பீரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் கேட்டும் கம்பீரும் சிரித்தார் எனச் சொல்லப்படுகிறது. அந்த உரையாடலின்போது முன்னாள் வீரர்கள் ஆர்.பி. சிங், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தங்களுடைய கடந்தகால நினைவுகளை மகிழ்ச்சிப் பொங்க வெளிப்படுத்தினர்.

திடீரென ரகசியத்தை தினேஷ் கார்த்திக் உடைத்திருப்பதால், இது கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்தாக இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: கைமாறும் CSK.. கைப்பற்றப் போகிறதா அதானி குழுமம்? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?

காம்பீர், தினேஷ் கார்த்திக்
India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com