சாம்பியனான இந்தியா... மகிழ்ச்சியில் வீடியோகால் செய்த ஹர்திக்! வதந்திகளுக்கு முற்றிப்புள்ளியா?

இந்தியா வெற்றிபெற்ற தருணத்தை வீடியோ கால் மூலம் ஹர்திக் பாண்டியா யாரிடமோ பகிர்ந்துள்ளார். அவர் யாரிடம் பேசினார் என தெரியாததால், அது யாரென நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா, நடாஷா
ஹர்திக் பாண்டியா, நடாஷாஇன்ஸ்டா

முதல் இன்னிங்ஸில் விராட் கோலியின் அரைசதம், இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சு, சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் ஆகியன 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் தன்வசம் கொண்டுவர உதவியாக இருந்தது. முக்கியமாகச் சொல்லவேண்டுமெனில், ஹர்திக் பாண்டியாவின் பந்தில் சூர்யகுமார் பிடித்த கேட்ச்தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தவிர, போட்டியின் இறுதி ஓவரையும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக வீசி, அதிலும் விக்கெட்டை வீழ்த்தியது இந்திய அணியின் மகுடத்தை உறுதி செய்தது. இதனால் இந்திய வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எனப் பலரும் மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதனர். இந்தக் காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்தது.

ஆனந்த கண்ணீருடன் இந்திய அணியினர் அனைவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிக்கொண்டனர். இதற்கிடையே இந்த சந்தோஷமான தருணத்தைப் பகிர்ந்துகொள்ள ஹர்திக் பாண்டியா, மைதானத்தில் அமர்ந்தபடி வீடியோ காலில் யாரிடமோ பேசியிருக்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: World Cup | அன்று காலில் வைத்த மிட்செல் மார்ஷ்.. இன்று SKY செய்த தரமான சம்பவம்! வைரலாகும் புகைப்படம்

ஹர்திக் பாண்டியா, நடாஷா
கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

ஆனால், அவர் யாரிடம் பேசுகிறார் எனத் தெரியவில்லை. இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில் பலரும், ஹர்திக் தன் மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சுக்குத்தான் பேசியிருப்பார் எனக் கருத்துகள் பகிர்ந்துள்ளனர். இருப்பினும் சிலர் ஹர்திக் தன் தாய் அல்லது சகோதரர் க்ருணால் பாண்டியாவிடம் பேசியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு உதாரணமாய், இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை நடாஷா ஸ்டான்கோவிச் தன்னுடைய வலைதளங்களில் இருந்து நீக்கியதும், அதுபோல் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்பட்டன. எனினும், விவாகரத்து / பிரிந்து வாழ்தல் என எதையும் ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாஷாவோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிக்க: T20 WC தோல்வி | கவலையில் ஆழ்ந்த தென்னாப்பிரிக்கா வீரர்கள்.. அருகில் சென்று ஆறுதல் சொன்ன ரிஷப் பண்ட்!

ஹர்திக் பாண்டியா, நடாஷா
ஓராயிரம் கேள்விகள்... கோப்பை வென்று பதில் சொன்ன ரோஹித் & கோலி!

இந்தச் சூழலில், ஹர்திக்கின் சகோதரர் க்ருணால் பாண்டியா பகிர்ந்திருந்த படம் ஒன்றுக்கு நடாஷா, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பிறகு, தன்னுடைய பக்கத்தில், இயேசு கிறிஸ்து ஒரு குழந்தையுடன் தனித்து நடந்து செல்லும் படம் ஒன்றையும் அவர் பகிர்ந்திருந்தார். இது வைரலானதுடன், ரசிகர்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இதற்குப் பிறகுதான், நடாஷா ஸ்டான்கோவிச் மீண்டும் தனது கணவருடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்திருந்தார்.

தற்போது, இந்திய அணி இந்த உலகக்கோப்பையை வாங்குவதற்கு ஹர்திக் பாண்டியாவும் ஒரு காரணம் என்பதால், ஹர்திக்கை சுற்றிய பேச்சுகள் மீண்டும் எழுகின்றன. ஹர்திக்கும் அவர் மனைவியும் பிரியவில்லை எனவும், அதனால் நடாஷாவுக்கு ஹர்திக் கோப்பை வென்றவுடன் வீடியோ காலில் பேசியிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அவர்களின் பிரிவு வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளிக்கு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பதிவிட்டுள்ளனர். ஆனால், தான் யாரிடம் பேசினேன் என ஹர்திக் பாண்டியா சொன்னால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

இதையும் படிக்க: T20 WC 2024 | ரோகித், கோலி ஓய்வு.. “இருவரையும் மிஸ் செய்வோம்” - ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா, நடாஷா
ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி சாதித்தவை என்னென்ன தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com