மைதானத்திலும் வெடித்ததா கேப்டன்ஸி மோதல்..ஹர்திக் ஃபேன் மீது ரோகித் ரசிகர்கள் தாக்குதல்? வைரல் வீடியோ

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஹர்திக் பாண்டியா ரசிகர் ஒருவரை, ரோகித் சர்மா ரசிகர்கள் தாக்கியதாக இணையத்தில் வீடியோ வெளியாகி வருகிறது.
தாக்குதல் வீடியோ
தாக்குதல் வீடியோட்விட்டர்

கோடை வெயிலைக் குளிர்ச்சியாக்கும் வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்கினாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஷிப் விவகாரம் களத்தில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (மார்ச் 24) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அதிலும் மும்பை அணிக்கு சொல்லவே வேண்டாம். மும்பை அணிக்காகக் கூடிய ரசிர்களில் பலர், ரோகித்தின் ஆதரவாளர்களாகவே நிரம்பியிருந்தனர். இதனால், போட்டியின் தொடக்கம் முதலே புதிய கேப்டன் ஹர்திக்கிற்கு எதிராகக் குரல்கள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிர்ந்தன.

அதிலும் ஹர்திக் பாண்டியா பந்துவீசும்போதும், ஃபீல்டிங் செய்யும்போது அவருக்கு எதிராகக் குரல் கொடுத்தபடி இருந்தனர். அதிலும் எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று மைதானத்துக்குள் ஓடிவந்த போது, ‘ஹர்திக்.. ஹர்திக்’ எனக் குரல் கொடுத்தனர். இந்தச் செயல் ஹர்திக் பாண்டியாவை மிகவும் வேதனையடைச் செய்தது. தவிர, ரோகித்தையும் பவுண்டரி எல்லை அருகே நிற்கவைத்து ஃபீல்டிங் செய்ய வைத்ததும் பேசுபொருளானது. இந்த விவகாரம் மும்பை அணியில் மீண்டும் மோதலை உருவாக்கி இருக்கும் நிலையில், மற்றொரு சம்பவமும் அந்தப் பிரச்னைக்குத் தீனி போட்டது அமைந்துள்ளது.

இதையும் படிக்க: தொடரும் விரிசல்: இந்தியாவுக்கு ஆதரவு.. திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர்.. என்ன காரணம்?

தாக்குதல் வீடியோ
MIvsGT|மைதானத்திற்குள் திடீரென ஓடிவந்த நாய்..’ஹர்திக்’ ’ஹர்திக்’ கத்திய ரோகித் ஃபேன்ஸ்! வைரல் வீடியோ

போட்டி நடைபெற்ற அன்றைய தினமே ஹர்திக் பாண்டியா ரசிகர் ஒருவரை, ரோகித் சர்மாவின் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். எதற்காக இந்தச் சண்டை நடைபெற்றது எனத் தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பின்னால் இருந்த ரசிகர்கள், “பொதுவாக, அவர்கள் எதற்குச் சண்டை போட்டுக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. பேச்சில் தொடங்கிய அவர்களது சண்டை இறுதியில் கைகலப்பில் முடிந்தது.

ஆனால், இந்தச் சண்டை இரு ரசிகர்களுக்குள் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. இருவரும் வேறுவேறு ரசிகர்களா என்பதும் தெரியவில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பல ஊடகங்கள் ஹர்திக் பாண்டியா மீது உள்ள கோபத்தில் அவரது ரசிகரை, ரோகித் சர்மா ரசிகர்கள் அடித்ததாகவே தெரிவித்துள்ளன. இந்த சண்டையும் நேற்று நடைபெற்றதாகவே கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க: “பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!

தாக்குதல் வீடியோ
ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com