"பும்ராவை ஏன் பந்துவீச வைக்கவில்லை? நீங்கள் செய்தது மிகப்பெரிய தவறு!" - ஹர்திக்கை விளாசும் வீரர்கள்!

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணி 277 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்தது.
பும்ரா - ஹர்திக் பாண்டியா
பும்ரா - ஹர்திக் பாண்டியாX

ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. ‘இன்னும் எவ்வளவு தான்ப்பா அடிப்பீங்க; வலிக்குதுள்ள’ என்று கதறும் அளவிற்கு மும்பை பந்துவீச்சை கதறகதற அடித்து துவைத்தனர் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள். 277 ரன்கள் குவித்து ஹைதராபாத் இமாலய சாதனை படைத்துவிட்டது. பின்னர் விளையாடிய மும்பை ஐபிஎல் வரலாற்றில் அதன் அதிக ரன் குவிப்பை செய்திருந்தபோதும் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பும்ரா - ஹர்திக் பாண்டியா
அதிகபட்ச 263 ரன்கள் ரெக்கார்டு உடைபடுமா?.. களம் 8-ல் மும்பை அணியை போட்டு பொளக்கும் SRH!

ஹர்திக் மீது எழுந்த கடுமையான விமர்சனம்!

நேற்றைய தோல்விக்கு பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பேட்டிங்கிலும், மற்ற எல்லோரும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்க, ஹர்திக் மட்டும் 120 ஸ்ரைக் ரேட்டில் அதாவது 20 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்ததும் விமர்சனம் ஆனது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

இதெல்லாம் விட முக்கியமான விஷயம் பந்துவீச்சு தான். நேற்றைய போட்டியில் முதல் 10 ஓவர்களில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே பும்ரா வீசினார். பவர் பிளேவில் நான்காவது ஓவரை வீசிய அவர் பின்னர் 13வது ஓவரில் தான் அழைக்கப்பட்டார். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் விளாசு விளாசு என விளாசிக் கொண்டிருந்த போதும் பும்ராவை பந்துவீச ஹர்திக் அழைக்கவே இல்லை.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

க்ளாசன் விளையாட வந்த பிறகு தான் 13 ஆவது ஓவரை வீச வந்தார். க்ளாசனை எதிர்கொள்ள ஹர்திக் திட்டமிட்டிருக்கலாம், ஆனால் ஆட்டம் ஏற்கனவே கைவிட்டு போனதை அவர் உணரவேயில்லை. அதனால், பும்ராவை சரியாக பயன்படுத்தாதது குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

பும்ரா - ஹர்திக் பாண்டியா
ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

உங்களுடைய சிறந்த பவுலர் எங்கே? - டாம் மூடி

இதுதொடர்பாக, மும்பை அணிக்கு கோப்பை பெற்று தந்த முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி, போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, “பும்ரா எங்கே? ஆட்டம் கிட்டதட்ட முடிந்துவிட்டது. ஆனால், உங்களுடைய பெஸ்ட் வீரர் ஒரே ஒரு ஓவர் தான் வீசியுள்ளார்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அத்துடன், போட்டி முடிந்த பின்னர் ESPNcricinfo-க்கு அவர் அளித்த பேட்டியில், “பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்துவதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்தான் உங்களது சிறந்த விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர். எப்பொழுது விக்கெட் வீழ்த்துவதில் சிறந்தவராகவே இருந்துள்ளார். அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஆட்டத்தின் ஓட்டத்தை தடுத்துவிட்டது. அது சரியானது இல்லை.

பும்ரா - ஹர்திக்
பும்ரா - ஹர்திக் web

டி20 பார்மெட்டில் உலகின் சிறந்த வீரரை பந்துவீச வைத்திருக்க வேண்டும். முதல் 10 ஓவரில் ஒரு ஓவர் மட்டுமே அவர் வீசியிருக்கிறார். ஆனால், குறைந்தபட்சம் இரண்டு ஓவராவது பவர் பிளேவில் வீசியிருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

பும்ரா - ஹர்திக் பாண்டியா
நாடி, நரம்பு.. அனைத்திலும் ஊறிப்போன CSK! ஆசை இருந்தும் பேட்டிங் செய்ய வராத தோனி! நெகிழ்ச்சி சம்பவம்!

பும்ரா ஒருவரால் தான் உங்களை காப்பாற்ற முடியும்!

பந்துவீசுவதில் எதற்கு மும்பை அணிக்கு இத்தனை குழப்பம் இருக்கிறது என்று புரியவில்லை என பேசியிருந்த பிரெட் லீ, பும்ராவை முதல் ஓவர் வீசவையுங்கள் என மும்பை அணிக்கு அட்வைஸ் செய்தார்.

பும்ரா
பும்ரா

இதுகுறித்து பேசிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீசுவதில் தவறான புரிதலுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன்.. முதல் ஓவரை ஜஸ்பிரித் பும்ரா தான் வீசியிருக்க வேண்டும். கடைசி இரண்டு ஆட்டங்களிலும் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவதற்கு வந்தபோது, முதல் போட்டியில் எதிரணியினர் 27/0 என்ற நிலையிலும், இரண்டாவது போட்டியில் 42/0 என்ற நிலையிலும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் ஏற்கனவே தங்களுடைய அடித்தளத்தை அமைத்துவிட்டனர். பும்ரா ஒருவர் தான் உங்களை முதல் ஓவரிலிருந்தே ஆட்டத்தில் வைக்கக்கூடிய ஒரே வீரர்” என்று பிரெட் லீ ஜியோசினிமாவில் பேசியுள்ளார்.

பும்ரா - ஹர்திக் பாண்டியா
277 ரன்கள் குவித்து வரலாறு படைத்த SRH! மோசமான சாதனை படைத்த MI கேப்டனாக மாறிய ஹர்திக்!

படுகொலை நடக்கும் போது பும்ரா காட்சியிலேயே இல்லை! - இர்ஃபான்

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை மோசமானது என்று விமர்சித்த முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மோசமானதாக இருந்தது. படுகொலை நடந்துகொண்டிருக்கும் போது பும்ராவை ஏன் வெகுதூரத்தில் வைத்திருந்தார்கள் என்று என் அறிவுக்கு எட்டவே இல்லை” என்று பேசியுள்ளார்.

பும்ரா - ஹர்திக் பாண்டியா
குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

இதுவொரு மோசமான கேப்டன்சி! - யூசஃப் பதான்

ஆட்டத்தின் நிறமே மாறிய போதும் பும்ரா ஒரு ஓவரை தான் வீசியிருந்தார் என்று ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை மோசமாக விமர்சித்திருந்த யுசஃப் பதான், “11 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களை விளாசிய போது உங்கள் சிறந்த பவுலர் பும்ரா ஒரு ஓவரை மட்டும் தான் வீசியிருந்தார். இதை மோசமான கேப்டன்சி என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?” என்று பேசியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், ரோகித்சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா மூன்றுபேருக்கும் இடையே இருக்கும் விரிசல் தான் மும்பை அணியின் மோசமான போக்கிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல இதேபோன்ற நிலை நீடித்து வந்தால், 2022-ல் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட நிலைமையே ஹர்திக் பாண்டியாவுக்கும் ஏற்படும் என்ற எச்சரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ச்சியாக இரண்டு சீசன்களாக ஐபிஎல் இறுதிப்போட்டிவரை அழைத்துச்சென்ற ஹர்திக் பாண்டியா, விரைவில் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையையும் ஒருபக்க ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பும்ரா - ஹர்திக் பாண்டியா
”களம் 8-ல் மும்பை அணியை பொளந்துகட்டிய SRH"-மோசமான கேப்டன்சி..ஹர்திக் பாண்டியா செய்த மிகப்பெரிய தவறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com