அதிகபட்ச 263 ரன்கள் ரெக்கார்டு உடைபடுமா?.. களம் 8-ல் மும்பை அணியை போட்டு பொளக்கும் SRH!

மும்பை அணிக்கு எதிரான 8வது லீக் போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 7 ஓவரிலேயே 100 ரன்களை எட்டி மிரட்டி வருகிறது.
SRH vs MI
SRH vs MIcricinfo

16 பந்தில் அரைசதமடித்து டிராவிஸ் ஹெட் சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஹைத்ராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் போட்டிகளில் தோல்விபெற்றுள்ள இரண்டு அணிகளில் எந்த அணி முதல் வெற்றியை பதிவுசெய்யும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இன்றைய போட்டி தொடங்கியது.

18 பந்துகளில் அரைசதமடித்து சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!

டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வுசெய்ய, பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

24 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட், வெறும் 18 பந்துகளில் அரைசதமடித்து SRH அணிக்காக புதிய சாதனையை படைத்தார். SRH அணிக்காக 20 பந்துகளில் அரைசதமடித்திருந்த டேவிட் வார்னரின் சாதனையை முறியடித்த டிராவிஸ் ஹெட் அசத்தினார்.

16 பந்தில் அரைசதமடித்து டிராவிஸ் ஹெட் சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா!

62 ரன்களில் டிராவிஸ் ஹெட் வெளியேறியதும் களத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா, ஹெட் விட்ட இடத்திலிருந்து அதிரடியான பேட்டிங்கை தொடர்ந்தார். ஹெட் பவுண்டரிகளாக அடித்து ரன்களை எடுத்துவந்த நிலையில், நான் அடிச்சா சிக்சர் தான் என ஆடிய அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என துவம்சம் செய்து கலக்கிப்போட்டார்.

அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா

வெறும் 16 பந்திலேயே அரைசதமடித்த அபிஷேக் சர்மா, சற்று நேரத்திற்கு முன் டிராவிஸ் ஹெட் படைத்த புதிய சாதனையை உடைத்து அந்த சாதனையில் தன்னுடைய பெயரை எழுதினார். 23 பந்துகளில் 63 ரன்களை விரட்டிய அபிஷேக் சர்மா சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து விளையாடினார்.

markram
markram

16 ஓவரில் 214 ரன்களை சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி விளாசி இருக்கும் நிலையில், அதிரடிவீரர் ஹென்ரிச் க்ளாசன், மார்க்கரம் தலா 30, 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 4 ஓவர்கள் மீதமுள்ளது. க்ளாசன் உடன் மார்கரமும் இணைந்திருக்கும் நிலையில், SRH அணி 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகபட்ச 263 ரன்கள் ரெக்கார்டு உடைபடுமா?

ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டல் சாதனையாக 263 ரன்கள் இருந்துவருகிறது. புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தக்கவைத்திருக்கும் இந்த அரிதான சாதனையை உடைக்கும் வாய்ப்பு SRH அணிக்கு பிரகாசமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com