குஜராத்தில் நடந்தது கம்மி; மும்பையில் இன்னும் சத்தமாக ஹர்திக் “Booed" செய்யப்படுவார்- முன்னாள் வீரர்

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியது மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் என இரண்டு விசயங்கள் மீதும் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாweb

2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து “ரோகித் சர்மா vs மும்பை இந்தியன்ஸ் vs ஹர்திக் பாண்டியா” என்ற மூன்று பெயர்கள் தான் பெருமளவில் தலைப்புச் செய்திகளில் இருந்துவருகிறது. 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதிலிருந்து தான் ”ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா” இரண்டு பெயர்களுக்கும் இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ரோகித் சர்மா
ரோகித் சர்மாIPL

புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்த முடிவு “ரோகித் சர்மாவிடம் கலந்து பேசப்பட்டு தான் எடுக்கப்பட்டது” என்று மும்பை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் அதனை ரோகித் சர்மா தரப்பிலிருந்து அவருடைய மனைவி ரிதிகா மறுத்ததால், ரோகித் சர்மாவை அவமரியாதை செய்துவிட்டதாக ரோகித் சர்மா ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனை இவ்வளவு கேவலமாக நடத்துவீர்களா என ஆதங்கம் பட்ட ரோகித் ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளங்களில் UNFOLLOW செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Rohit Sharma - Hardik Pandya
Rohit Sharma - Hardik PandyaIPL

இந்தவிவகாரம் ’மும்பை அணி vs ரோகித் சர்மா’ என்பதலிருந்து மாறி கடைசியாக ’ஹர்திக் பாண்டியா vs ரோகித் சர்மா’ என்று மாறியுள்ளது. ரோகித் சர்மாவிற்கு மாற்றுகேப்டன் ஹர்திக் பாண்டியாவா என ஆத்திரமடைந்த ஹிட்மேன் ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா மீதும் வெறுப்பை வெளிக்காட்டினர்.

ஹர்திக் பாண்டியா
'இடுப்பு உயர No Ball' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.. புதிய டெக்னாலஜியை கையில் எடுக்கும் BCCI! விவரம்!

ரோகித்தை அவமரியாதை செய்த ரோகித் சர்மா!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா நடத்திய விதம், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. ‘ஃபீல்டிங்கின் போது 30 யார்ட் வட்டத்தில் இருந்த ரோகித் சர்மாவை திடீரென லாங்க்-ஆன் ஃபீல்டிங்கிற்கு செல்லுமாறு ஹர்திக் பாண்டியா உத்தரவிட்டார். அதை சற்றும் எதிர்ப்பாராத ரோகித் பின்னால் திரும்பி பார்த்துவிட்டு ‘நானா? என்னையா கூறுகிறாய்?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார். ‘ஆமாம் சென்று லாங்க்-ஆனில் நில்லுங்கள்’ என ஹர்திக் சொல்ல, வேகமாக சென்று எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்றார் ரோகித். ஆனால் ‘அங்கு நிற்காதீங்க, தள்ளி நில்லுங்க’ என்று அங்கும் இங்குமாக ரோகித்தை ஹர்திக் அலையவிட’ அந்த வீடியோவை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மீது கடுமையான விமர்சனத்தை வைத்தனர்.

ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா - ரோகித் சர்மாX

அதுமட்டுமல்லாமல் GT-க்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியா மீது அதிகப்படியான வெறுப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள், அவர் பேசும் போதும், ஃபீல்டிங் மாற்றும் போதும், பந்துவீசும் போதும் என எப்போதெல்லாம் ஹர்திக் பாண்டியா மூவ்மெண்ட்டில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் மைதானதில் இருந்த ரசிகர்கள் “Booo” என கத்தி எதிர்ப்பை வெளிக்காட்டினர். அதற்கும்மேல் மைதானத்திற்குள் நாய் ஒன்று நுழைந்த போது “ஹர்திக், ஹர்திக்” என கத்தி மோசமாக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஹர்திக் பாண்டியா
ரோகித்தை அவமரியாதை செய்த ஹர்திக்.. 12 முறை எழுந்த எதிர்ப்பு குரல்! MI-ஐ வீழ்த்தி GT அசத்தல் வெற்றி!

மும்பையில் இன்னும் சத்தமாக 'Booed' செய்யப்படுவார்!

ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் வெறுப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கும் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, “அகமதாபாத்தில் நடந்ததை விட ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமான சத்தத்துடன் 'booed' செய்யப்படுவார். ஏனென்றால் ஒரு மும்பை ரசிகராக, ஒரு ரோகித் சர்மா ரசிகராக யாருமே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவின் கேப்டன்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர். அதிக கோப்பைகளை வென்ற பிறகு கேப்டன்சி மாற்றம் சரிதான் என்றாலும், இது ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. அதற்கான எதிர்வினையை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டு வருகிறார்” என்று பிடிஐ உடன் பேசியுள்ளார்.

hardik - manoj tiwari
hardik - manoj tiwari

அதிகப்படியான டிரோலின் போதும் அமைதியாக இருந்த ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய மனோஜ் திவாரி, ”மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு அதிகப்படியான ட்ரோல்களும், கேலிகளும் நிகழ்த்தப்பட்டாலும், அதற்கெல்லாம் எந்த எதிர்வினையும் காட்டாமல் ஹர்திக் அமைதியாக இருந்தார். அது ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கும் சிறந்த குணத்தை காட்டுகிறது. எல்லாவற்றையும் தாண்டி அவர் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கு தேவையென்று நினைக்கிறேன். அதற்கு அவர் எல்லாவற்றையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் சிறப்பாக செயல்படவேண்டும். ஒரு நம்பர் 1 ஆல்ரவுண்டர் இந்திய அணியில் சிறந்த ஃபார்முடன் இருப்பது இந்திய அணிக்கு பலமாக இருக்கும்” என்று மேலும் கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா
நாடி, நரம்பு.. அனைத்திலும் ஊறிப்போன CSK! ஆசை இருந்தும் பேட்டிங் செய்ய வராத தோனி! நெகிழ்ச்சி சம்பவம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com