FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முகம்மது ஷமியும், பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக இணையத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.
ஷமி, சானியா மிர்சா
ஷமி, சானியா மிர்சாஎக்ஸ் தளம்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரராக இருப்பவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது ஷமி. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டுசென்றவர். இந்தத் தொடரில் இவருடைய பங்களிப்பும் பேசப்பட்டது. தற்போது காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

அதுபோல், இந்தியாவில் மிகப் பிரபலமான டென்னிஸ் நட்த்திரம் எனப் பேசப்பட்டவர் சானியா மிர்சா. இந்த நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

ஷமி, சானியா மிர்சா
“சில மாதங்களுக்கு முன்பே விவாகரத்து செய்துவிட்டனர்...” - சானியா மிர்சா குடும்பத்தினர் அறிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்ட சானியா மிர்சா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் விவாகரத்து பெற்றார். இதைத் தொடர்ந்து சோயிப் மாலிக் மூன்றாவது திருமணமும் செய்துள்ளார். ஆனால், சானியா மிர்சா திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுபோல் கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியும் அவரது மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அவருக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் அளித்து வருகிறார்.

இந்த நிலையில், சானியாவும், ஷமியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் சானியா மிர்சாவின் நிச்சயத்தார்த்த வைரல் புகைப்படங்கள் போலியானது மட்டுமல்ல, அவர்களது திருமணம் பற்றிய வதந்திகளும் பொய்யானவை. மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரின் தரப்பிலிருந்தும் இதுபோன்ற செய்திகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே சோயிப் மாலிக்குடன் நடைபெற்ற புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இதில், உண்மை இல்லை. இது ஒரு குப்பையான செய்தி. சானியாவை முகம்மது ஷமி இதுவரை சந்தித்ததுகூட இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

ஷமி, சானியா மிர்சா
குழந்தையுடன் விளையாடினார், என்னை பார்க்கக் கூடவில்லை : ஷமி மனைவி உருக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com