குழந்தையுடன் விளையாடினார், என்னை பார்க்கக் கூடவில்லை : ஷமி மனைவி உருக்கம்!

குழந்தையுடன் விளையாடினார், என்னை பார்க்கக் கூடவில்லை : ஷமி மனைவி உருக்கம்!
குழந்தையுடன் விளையாடினார், என்னை பார்க்கக் கூடவில்லை : ஷமி மனைவி உருக்கம்!

ஷமி தன்னை மிரட்டுவதாகவும், நீதிமன்றத்தில் சந்திக்கலாம் எனக் கூறுவதாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து, தேசிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், விபத்து ஏற்பட்டு ஷமி காயமடைந்தார்.

இந்நிலையில் காயம் ஏற்பட்டுள்ள ஷமியை நேரில் சந்திக்க ஹசின் ஜாஹன் சென்றுள்ளார். ஆனால் ஷமி சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹசின், “நான் ஷமியை பார்க்க தான் வந்தேன். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். அத்துடன் என்னை மிரட்டினார். நீதிமன்றத்தில் உன்னை சந்திக்கிறேன் என்றார். இருப்பினும் அவர் எங்கள் குழந்தையை சந்தித்தார். விளையடினார். ஆனால் என்னை சந்திக்கவில்லை. அவரது அன்னை ஒரு பாதுகாவலர் போல அவருடனே இருந்தார்” என கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com